ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஆவின் பொருட்கள் விலையை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஆவின் பொருட்கள் விலையை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ஜிஎஸ்டி குறைப்​புக்கு பிந்​தைய ஆவின் பால் பொருட்​கள் விலை​யைக் குறைக்க வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர் ​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: ஜிஎஸ்டி கவுன்​சிலில் எடுக்​கப்​பட்ட முடி​வின்​படி நெய், வெண்​ணெய், பன்​னீர் உள்​ளிட்ட பால் பொருட்​கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்​திலிருந்து 5 சதவீத​மாக​வும், ஐஸ்க்​ரீம் வகைகள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்​திலிருந்து 5 சதவீத​மாக​வும் செப்​.22-ம் தேதி​முதல் குறைக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால் தமிழக அரசால் நடத்​தப்​படும் ஆவின் நிறுவன பால் பொருட்​கள் விலை குறைக்​கப்​பட​வில்​லை. திமுக அரசின் இந்த செயல் கடும் கண்​டனத்​துக்​குரியது.

இந்​தி​யா​வில் பல்​வேறு மாநிலங்​களில் உள்ள பால் நிறு​வனங்​கள் வரி குறைப்​பின் பலனை மக்​களுக்கு அளித்​துள்ள நிலை​யில், ஆவின் நிறு​வனம் மட்​டும் புதிய விலைப் பட்​டியலை வெளி​யிட​வில்​லை.

மாறாக நவ.30-ம் தேதி வரை பண்​டிகைக் கால தள்​ளு​படி வழங்​கு​வ​தாக அறி​வித்​து, டிசம்​பர் 1-ம் தேதி​முதல் ஜிஎஸ்டி வரி குறைப்​புக்கு முன் இருந்த அதே விலையை மீண்​டும் ஆவின் நிறு​வனம் நடை​முறைக்கு கொண்டு வந்​துள்​ளது.

தனி​யார் நிறு​வனங்​களுக்கு எடுத்​துக்​காட்​டாக விளங்க வேண்​டிய மாநில அரசே ஜிஎஸ்டி குறைப்​பின் பயனை மக்​களுக்கு அளிக்​காமல் இருக்​கும் செயல் வழிப்​பறிக் கொள்​ளைக்​குச் சமம், சட்​டத்​துக்கு புறம்​பானது.

எனவே முதல்​வர் இதில் உடனடி​யாகத் தலை​யிட்​டு, ஆவின் பால் பொருட்​கள் மீதான ஜிஎஸ்டி குறைப்​பின் பலனை பொது​மக்​களுக்கு அளிக்​கும் வகை​யில், ஜிஎஸ்டி குறைப்​புக்கு பிந்​தைய விலையை உடனடி​யாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்கையில் கூறப்​பட்​டுள்​ளது.

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஆவின் பொருட்கள் விலையை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
பொன்னேரியில் ‘கதிசக்தி’ பன்முக சரக்கு முனையம்: 1,389 கிமீ பயணிக்கும் முதல் சரக்கு ரயில் சேவை தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in