அரசுப் பேருந்துகளில் பயணிகள் மட்டுமே முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்ய முடியும்

அரசுப் பேருந்துகளில் பயணிகள் மட்டுமே முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்ய முடியும்
Updated on
1 min read

சென்னை: விநாயகர் சதுர்த்தி தொடர் விடு​முறை முடிந்து சென்னை திரும்​பும் பயணி​களுக்​காக கிளாம்​பாக்​கம் பேருந்து முனை​யம் மற்​றும் கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​தில் மாநகரப் போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள இணைப்பு பேருந்​துகள் இயக்​கத்தை போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் ஆ.விஜய் தமிழன் பார்த்​திபன் நேற்று காலை​யில் ஆய்வு செய்​து, பொது மக்​களிடம் பேருந்​துகள் இயக்​கம் குறித்து கேட்​டறிந்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: அரசுப் போக்​கு​வரத்​துக் கழகங்​கள் சார்​பில், சென்​னை​யில் இருந்து தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களுக்​கு, கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கிளாம்​பாக்​கம் பேருந்து முனை​யத்​தில் இருந்து வழக்​க​மாக இயக்​கப்​படும் 3,297 பேருந்​துகளு​டன், 2,915 சிறப்​புப் பேருந்​துகள் என மொத்​தம் 6,212 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

இவற்​றில் 2,48,270 பயணி​கள் பயணம் மேற்​கொண்​டனர். விநாயகர் சதுர்த்தி தொடர் விடு​முறை முடிந்து சென்​னைக்கு வரும் பயணி​களின் வசதிக்​காக, திங்​கள்​கிழமை (14-ம் தேதி) வழக்​க​மாக இயக்​கப்​படும் 1,099 பேருந்​துகளு​டன், 2,240 சிறப்பு பேருந்​துகள் என 3,339 பேருந்​துகள் இயக்கப்பட்டன.

அரசுப் பேருந்​துகளில் முன்​ப​திவு செய்த டிக்​கெட்​கள் தானாக ரத்​தாவது இல்​லை. முன்​ப​திவு செய்​தவர்​கள் தான் ரத்து செய்ய முடி​யும், அவர்​களின் எண்​ணுக்கு வரும் ஓடிபியை உள்​ளீடு செய்​தால் மட்​டுமே ரத்து செய்ய முடி​யும். சிலர் திட்​ட​மிட்டே பொய் பரப்​புரை செய்து வரு​கின்​றனர்.

ஆம்னி பேருந்​துகளில் முன்​ப​திவு டிக்​கெட் ரத்து செய்​யப்​பட்​ட​தாக​வும், கூடு​தல் கட்​ட​ணம் வசூலிப்​ப​தாக​வும் புகார்​கள் வந்​தன. அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் விதி​மீறல்​களில் ஈடு​படு​வோரின் உரிமம் ரத்து செய்​யப்​படும் என எச்​சரிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் கூறி​னார்.

அரசுப் பேருந்துகளில் பயணிகள் மட்டுமே முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்ய முடியும்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in