மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா: தவெகவில் சேர்ந்த அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் தலைமைச் செயலகத்தில் வழங்கினார். படம்: எல்.சீனிவாசன்

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் தலைமைச் செயலகத்தில் வழங்கினார். படம்: எல்.சீனிவாசன்

Updated on
1 min read

சென்னை: அ​தி​முக எம்​எல்ஏ இசக்கி சுப்​பை​யா, தனது பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக.​வில் இணைந்​தார்.

தமிழகத் தேர்​தலில் அதி​முக 3-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது. இதையடுத்து அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு எதி​ராக சி.​வி.சண்​முகம், எஸ்​.பி.வேலுமணி தலை​மை​யில் எம்​எல்​ஏக்​கள் சிலர் தனி அணி​யாகச் செயல்​படு​கின்​றனர். இந்த அணி​யில் இருந்த மரகதம் குமர​வேல், சத்​ய​பா​மா, ஜெயக்​கு​மார் ஆகியோர் தங்​களு​டைய எம்​எல்ஏ பதவி​களை நேற்று முன்​தினம் ராஜி​னாமா செய்​தனர். பிறகு அவர்​கள் தவெக​வில் இணைந்​தனர்.

அதி​முக எம்​எல்​ஏக்​களின் ராஜி​னாமா கடிதங்​களைப் பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் ஏற்​றுக் கொண்​டார். அத்​துடன் 3 பேரும் வெற்றி பெற்ற மது​ராந்​தகம், தாராபுரம், பெருந்​துறை சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் சி.​வி.சண்​முகம் அணி​யில் உள்ள அம்​பாச​முத்​திரம் எம்​எல்ஏ இசக்கி சுப்​பையா நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். அதற்​கான கடிதத்தை ஜேசிடி பிர​பாகரிடம் கொடுத்​தார். ஆனால் அந்த கடிதத்தை ஏற்க அவர் மறுத்​தார்.

அப்​போது அவர் கூறுகை​யில், ‘‘ராஜி​னாமா செய்​வ​தாக கைப்பட எழு​திய கடிதத்தை மட்​டுமே ஏற்க முடி​யும். தட்​டச்சுசெய்து அதில் கையெழுத்​திட்டகடிதத்தை ஏற்க முடி​யாது" என்று தெரி​வித்​தார். அதைத் தொடர்ந்​து, கைப்பட ராஜி​னாமாகடிதத்தை எழு​தி, பேர​வைத் தலை​வரிடம் இசக்கி சுப்​பையா வழங்​கி​னார்.

அதை பேர​வைத் தலை​வர் ஏற்​றுக் கொண்​டார். பிறகு பனையூரில் உள்ள தவெக அலு​வல​கத்​தில் அமைச்​சர்​கள் செங்​கோட்​டையன், ஆனந்த் முன்​னிலை​யில் இசக்கி சுப்​பையா தவெக​வில் இணைந்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய சுப்​பை​யா, ‘‘எதிர்க்​கட்சி எம்​எல்​ஏ​வாக பெரிய அளவில் நலத்​திட்​டங்​களைக் கொண்டு வரமுடிய​வில்​லை. இப்​போது என் அம்​பாச​முத்​திரம் தொகு​திக்கு பல நலத்​திட்​டங்​களைக் கொண்டு வர வேண்​டும் என்ற ஒரே நோக்​கத்​தில் தவெக​வில்​ இணைந்​துள்​ளேன்​” என்​றார்​.

4 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு: அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் இருந்த எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை ) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா வும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், தற்போது அந்த 4 தொகுதிகளும் காலியாகிவிட்டதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்த நிலையில், தமிழகத்தில் தற்போது 5 இடங்கள் காலியாக உள்ளன.

<div class="paragraphs"><p>அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் தலைமைச் செயலகத்தில் வழங்கினார். படம்: எல்.சீனிவாசன்</p></div>
பிரதமரை சந்திக்கிறார் முதல்வர்: தவெக ஆட்சி அமைந்த பிறகு இன்று முதல் முறை டெல்லி பயணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in