லோடு கிடைக்காமல் 1 லட்சம் லாரிகள் முடக்கம்: டீசல் விலையை குறைக்க உரிமையாளர்கள் வேண்டுகோள்

டீசல் விலை உயர்வால் லோடு கிடைக்காமல், சேலம் செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள். படம் : எஸ்.குரு பிரசாத்

டீசல் விலை உயர்வால் லோடு கிடைக்காமல், சேலம் செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள். படம் : எஸ்.குரு பிரசாத்

Updated on
1 min read

சேலம்: தமிழகத்​தில் 1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான எண்​ணிக்​கையி​லான லாரி​கள், போக்​கு​வரத்து இன்றி முடங்கி உள்​ள​தாக லாரி உரிமை​யாளர்​கள் கவலை தெரி​வித்​து உள்​ளனர்.

அமெரிக்​கா, இஸ்​ரேல்- ஈரான் போர் காரண​மாக, நாடு முழு​வதும் சமையல் எரி​வா​யு, பெட்​ரோல், டீசல் ஆகிய​வற்​றின் விலை உயர்த்​தப்​பட்​டது. இந்​நிலை​யில் டீசல் விலை உயர்வு காரண​மாக, தமிழகத்​தில் மட்​டும் 1 லட்​சத்​துக்​கும் அதிக எண்​ணிக்​கையி​லான லாரி​கள், போக்​கு​வரத்து இன்றி முடங்கி நிற்​ப​தாக லாரி உரிமை​யாளர்​கள் வேதனையுடன் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து மாநில லாரி உரிமை​யாளர்​கள் சம்​மேளனத் தலை​வர் தனராஜ் தெரி​வித்​த​தாவது: கடந்த சில மாதங்​களில் பெட்​ரோல், டீசல் விலை படிப்​படி​யாக உயர்த்​தப்​பட்டு வந்​தது. டீசல் விலை லிட்​டருக்கு ரூ.8-க்​கும் மேல் உயர்ந்​து​விட்​டது. டீசல் விலை உயர்​வால் லாரி​களுக்​கான வாடகை 25 சதவீதம் வரை உயர்த்த வேண்​டிய​தானது.

ஆனால், கடந்த 5 ஆண்​டு​களில் டயர், வாகன உதிரி பாகங்கள், காப்பீடு கட்​டணம், சுங்​கக்​கட்​ட​ணம் ஆகியவை உயர்ந்​த​போதும் லாரி வாடகை உயர்த்​தப்​பட​வில்​லை. கடந்த 4 ஆண்​டு​களாக, சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் விலை குறை​வாக இருந்​த​போ​தி​லும், இந்​தி​யா​வில் பெட்​ரோல், டீசல் விலை குறைக்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், அமெரிக்​கா- ஈரான் போரைத் தொடர்ந்​து, பெட்​ரோல், டீசல் விலை உயர்த்​தப்​பட்​டு, தற்​போது டீசல் விலை லிட்​டருக்கு ரூ.8-க்​கும் மேல் உயர்த்​தப்​பட்​ட​தால் லாரி​களுக்​கான வாடகை 25 சதவீதம் உயர்ந்​து​விட்​டது.

தமிழகத்​தில் கனரக லாரி​கள் 6.50 லட்​சத்​துக்​கும் அதி​க​மான எண்​ணிக்​கை​யில் இருக்​கும் நிலை​யில், டீசல் விலை உயர்​வி​னால், 1 லட்​சத்​துக்​கும் அதி​கமான லாரி​கள், லோடு கிடைக்​காமல் முடங்​கி​விட்​டன. சேலத்​தில் இருந்து ஜவ்​வரிசி, ஸ்டோன் பவுடர், தேங்​காய், சர்க்​கரை உட்பட பல்​வேறு பொருட்​கள், லாரி​களில் கொண்டு செல்​வது பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

லாரி தொழிலை வாழ்​வா​தா​ர​மாக கொண்​டுள்ள கோடிக்​கணக்​கானோர், பாதிக்​கப்​பட்டு உள்​ளனர். தற்​போது, அமெரிக்​கா- ஈரான் இடையி​லான போர் முடிவுக்கு வந்​துள்ள நிலை​யில், டீசல் விலை உயர்வை திரும்​பப் பெற மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றார்​.

<div class="paragraphs"><p>டீசல் விலை உயர்வால் லோடு கிடைக்காமல், சேலம் செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள். படம் : எஸ்.குரு பிரசாத்</p></div>
“12 ஆண்டுகால பிரதமர் பணி என் வாழ்வின் மிகச் சிறந்த அனுபவம்!” - பாரிஸில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in