சென்னை மெட்ரோ ரயில்களில் செப்டம்பரில் ஒரு கோடி பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் செப்டம்பரில் ஒரு கோடி பேர் பயணம்
Updated on: 
1 min read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் செப்டம்பர் மாதத்தில் ஒரு கோடியே 26 ஆயிரத்து 601 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். விரைவான, பாதுகாப்பான, சொகுசான பயணம் காரணமாக, மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் செப்டம்பர் மாதத்தில் ஒரு கோடியே 26 ஆயிரத்து 601 பேர் பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் அதிபட்சமாக, 11-ம் தேதி 3 லட்சத்து 93 ஆயிரத்து 580 பேர் பயணம் செய்துள்ளனர்.

செப்டம்பரில் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 51 லட்சத்து 95 ஆயிரத்து 408 நபர்களும், ஒற்றை பயண காகித க்யூஆர் பயன்படுத்தி 18 லட்சத்து 82 ஆயிரத்து 30 பேரும், சென்னை ஒன் செயலி மூலமாக 3 லட்சத்து 12 ஆயிரத்து 300 பேரும் பயணம் செய்துள்ளனர்.

டிஜிட்டல் எஸ்.வி.பி, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, வாட்ஸ் அப் மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற டிக்கெட்களை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மெட்ரோ ரயில்களில் செப்டம்பரில் ஒரு கோடி பேர் பயணம்
மடப்புரம் காவலாளி கொலையில் டிஎஸ்பி உள்பட 4 பேர் கைதுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in