ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் பொங்​கல் பண்​டிகையை கொண்​டாட சென்னை போன்ற பெரு நகரங்​களில் வசிப்​பவர்கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்கு செல்​வது வழக்​கம்.

இதற்​காக ஆண்​டு​தோறும் தமிழக அரசு சார்​பில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும். அந்த வகை​யில் கடந்த 9-ம் தேதி​ முதல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

அரசுப் பேருந்​துகளில் இடம் கிடைக்​காதவர்​கள் ஆம்னி பேருந்​துகளை தேர்வு செய்​வார்​கள். இந்த சூழ்​நிலையை பயன்​படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கின்​றனர்.

சென்​னை​யிலிருந்து மதுரை, கோவை, சேலம், திருச்​சி, நெல்லை, நாகர்​கோ​வில் போன்ற முக்​கிய நகரங்​களுக்கு செல்​லும் ஆம்னி பஸ் கட்​ட​ணம் வழக்​கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதி​கரித்​துள்​ளது.

ஜன. 13, 14 ஆகிய தேதி​களில் பெரும்​பாலானோர் பயணிப்​பார்​கள் என்​ப​தால் அந்த நாட்​களில் சென்​னை​யில் இருந்து கோவைக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்​சாதன பேருந்துகளில் ரூ.3 ஆயிரம் வரை கட்​ட​ணம் வசூலிக்கப்படு​கிறது. இதற்கு அதி​கபட்ச கட்​ட​ணம் ரூ.2400 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள குறிப்​பிடத்​தக்​கது.

அதே​போல நெல்​லைக்கு அதி​கபட்​ச​மாக ரூ.2,700 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், ரூ.3,200 முதல் 3,800 வரை​யும், மதுரைக்கு அதி​கபட்​ச​மாக ரூ.2,200 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், ரூ.2,600 முதல் 3,200 வரை​யும், திருச்​சிக்கு அதி​கபட்​ச​மாக ரூ.1,500 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் ரூ.2,000 முதல் 3,200 வரை​யும் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

இதுகுறித்து போக்​கு​வரத்​து அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “அதிக கட்​ட​ணம் குறித்து புகார் வந்​தால் நடவடிக்கை எடுக்​கப்​படும். ஆம்னி பேருந்​துகளில் சோதனை மேற்​கொண்டு கூடு​தல் கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டால், பேருந்​துகளுக்​கு அப​ராதம்​ வி​தித்​து கூடு​தல்​ கட்​ட​ணத்​ தொகை பயணி​களுக்​கு திருப்​பிக்​ கொடுக்​கப்​படும்​” என்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடும் குளிரால் மக்கள் பாதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in