

படப்பை: தாம்பரம் அருகே படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (60) என்பவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இவர், ஒரு வீட்டில் மின்சாரப் பணிக்காக சென்றிருந்தபோது, தனியாக இருந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கிருஷ்ணகுமாரை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.