மதுபான கலவையில் ஐஸ்கிரீம் விற்பனை? - அண்ணாநகர் கடையில் அதிகாரிகள் சோதனை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: அண்​ணாநகரில் மது​பான சுவை​களில் ஐஸ்கிரீம் விற்​கப்​படு​வ​தாக எழுந்த புகாரைத் தொடர்ந்​து, சம்​பந்​தப்​பட்ட கடை​யில் உணவு பாது​காப்​புத்துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

சென்னை மேற்கு அண்ணா நகர் வெல்​கம் காலனி பகு​தி​யில் பிரபல ஐஸ்​கிரீம் கடை செயல்பட்டு வரு​கிறது இந்​தக் கடை​யில் ஒயின், வோட்​கா, விஸ்​கி, ரம் போன்ற உலகத் ​தரம் வாய்ந்த மது​பானங்​களின் சுவை​களில் (Flavors) ஐஸ்​கிரீம்​கள் விற்​பனை செய்​யப்​படு​வ​தாக சமீபத்​தில் சமூக வலை​தளங்​களில் விளம்​பரங்​கள் வெளி​யாகி, பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தின.

இது இளம்​பரு​வத்​தினரை மதுப்​பழக்​கத்​துக்கு தூண்​டும் வகை​யில் இருப்​ப​தாக புகார்​கள் எழுந்​தன. இதையடுத்​து, திரு​வள்​ளூர் மாவட்ட உணவு பாது​காப்​புத்​ துறை அதி​காரி ரவிச்​சந்​திரன் தலை​மையி​லான குழு​வினர் அந்​தக்கடை​யில் திடீர் சோதனை மேற்​கொண்​டனர்.

இதுகுறித்து உணவு பாது​காப்​புத்​துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: புகாரின் பேரில் கடை​யில் சோதனை நடத்​தி​ய​தில், நேரடி​யாக ஆல்​கஹால் (மது​பானம்) கலக்​கப்​பட்​டதற்​கான எந்த ஆதா​ர​மும், மது பாட்​டில்​களும் சிக்​க​வில்​லை.

மது​பானத்​தின் சுவை, மணம் வரவழைப்​ப​தற்​காக ‘எசன்​ஸ்’ மற்​றும் பிளேவர் திர​வங்​கள் மட்​டுமே பயன்​படுத்​தப்​பட்​டது முதல்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இருப்​பினும், இதில் ரசாயனங்​கள் ஏதேனும் அச்​சுறுத்​தலாக உள்​ளதா என்​பதை அறிய 2 ஐஸ்​கிரீம் மாதிரி​கள் சேகரிக்​கப்​பட்டு ஆய்​வகத்​துக்கு அனுப்​பப்பட்​டுள்​ளன. இதன் முடிவு​கள் வந்​ததும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டு அகற்றப்பட்ட விவகாரம்: சீரமைக்காவிட்டால் போராட்டம் நடைபெறும் என தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in