அக்.6-ல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

அதி​முக எம்​எல்​ஏ-க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மதுராந்தகம் மரகதம் குமர​வேல், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, பெருந்​துறை ஜெயக்​கு​மார், அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்பை​யா, விராலிமலை சி.​விஜய​பாஸ்​கர், கரூர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்​களின் ராஜி​னா​மாவை பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்​றுக் கொண்​டதையடுத்து அந்த தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டன.

இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதியும் காலியானது. இதன்மூலம், மொத்தம் 7 தொகுதிகள் காலியாகின.

இதனிடையே, அதி​முக கொற​டா​வின் உத்​தரவை மீறி பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்​சித்​ தாவல் தடைச் ​சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் ​கோரி அதிமுக சார்​பில் பேர​வைத் தலை​வரிடம் கடிதம் கொடுக்​கப்​பட்​டது.

மேலும், கட்​சித் ​தாவல் நடவடிக்கை நிலு​வை​யில் இருந்து வந்த நிலை​யில் அதி​முக எம்​எல்​ஏ-க்​களின் ராஜி​னாமா கடிதங்​களை ஏற்று பேர​வைத் தலை​வர் பிறப்​பித்த உத்தரவை ரத்து செய்​யக் ​கோரி அதி​முக கொறடா எஸ்.எஸ். கிருஷ்ண​மூர்த்தி உள்​ளிட்​டோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​ தொடர்ந்​திருந்​தனர்.

இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் செப்.9-ம் தேதி தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய செப்.16 கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை செப்.17-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற செப்.19 கடைசி நாள். தேர்தலில் பதிவான வாக்குகள் அக்.-9ம் தேதி நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தின் ரெஜிநகர், நந்திகிராம், அசாமின் நாகோன் ஆகிய தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அக்.9-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ஜந்தர் மந்தர் தாக்குதல் வழக்கில் சுதந்திரா பரத்வாஜுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in