எம்.பி.எண்ணிக்கையை 25 ஆண்டுக்கு உயர்த்தக் கூடாது: தமிழக காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

எம்.பி.எண்ணிக்கையை 25 ஆண்டுக்கு உயர்த்தக் கூடாது: தமிழக காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
Updated on
1 min read

சென்னை: மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 543 என்பதே 25 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்​னை காம​ராஜர் அரங்​கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்​சி​யின் சிறப்​புப் பொதுக்​குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் மாநிலத் தலை​வர் மாணிக்​கம் தாகூர், முன்​னாள் தலை​வர்​கள் கே.வீ.தங்​க​பாலு, சு.​திரு​நாவுக்​கரசர், எம்​எல்​ஏக்​கள், எம்.​பி.க்​கள் கலந்து கொண்​டனர்.

இ​தில் பல்​வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. குறிப்​பாக, பிரதமர் மோடி அளித்த கறுப்​புப் பணம் ஒழிப்​பு, வேலை​வாய்ப்பு உரு​வாக்​கம், விவ​சா​யிகள் வரு​மானம் இரட்​டிப்பு உள்​ளிட்ட பல்​வேறு வாக்​குறு​தி​களை நிறைவேற்​றாத பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்க வேண்​டும்.

1971 மக்​கள் தொகை அடிப்​படை​யில் அமைக்​கப்​பட்ட 543 மக்​களவை உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கையே மேலும் 25 ஆண்​டு​களுக்கு நீடிக்க வேண்​டும்.

2018 முதல் 2024 வரை கார்ப்​பரேட்​​கள் வழங்​கிய மொத்த தேர்​தல் பத்​திர நன்​கொடை​யான ரூ.16,518 கோடி​யில், பாஜக மட்​டும் ரூ.8,252 கோடி (50%) பெற்​றுள்​ளது.

கார்ப்​பரேட்​​களுக்கு சலுகை செய்து பெற்ற இந்த நிதி ஊழல் இல்​லையா என்​பதை பாஜக விளக்க வேண்​டும். காவிரி உரிமையை நிலை​நாட்​ட​வும், மேகே​தாட்​டு​வில் அணை கட்​டு​வதைத் தடுக்​க​வும் தமிழக அரசு எடுக்​கும் அனைத்து முயற்​சிகளுக்​கும் காங்​கிரஸ் துணை நிற்​கும்.

கடந்த 60 ஆண்​டு​களாக திரா​விட இயக்​கங்​களின் புரையோடிப்​போன ஊழல் ஆட்​சிக்கு முடிவு கட்​டும் வகை​யில் தவெக தலைவர் விஜய் எடுத்த முயற்​சிக்கு 27 மாதங்​களில் பலன் கிடைத்து திமுக ஆட்சி அகற்​றப்​பட்​டுள்​ளது.

இந்த மாற்​றத்தை இக்​கூட்​டம் நெஞ்​சார வரவேற்​கிறது என்பன உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசியபோது, “தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி அமையகாங்கிரஸ் துணை நிற்பதில் மகிழ்ச்சி.

யாருடைய முதுகிலும் நாங்கள் குத்தவில்லை.ராகுல் காந்தி 2029-ல் பிரதமராக பதவியேற்பது உறுதி” என்றார். மாணிக்​கம் தாகூர் பேசும்​போது, “காங்​கிரஸ் கட்​சிக்கு கூட்​டணி அவசி​யம்​தான். ஆனால் அது கட்​சி​யின் சுய அடை​யாளத்தை அழிப்​ப​தாக இருக்​கக்​கூ​டாது.

தற்​போது தமிழகத்​தில் 5-வது இடத்​தில் இருக்​கும் காங்​கிரஸ் கட்​சி​யை, அடுத்த 24 மாதங்​களுக்​குள் 3-வது பெரிய அரசி​யல் சக்​தி​யாக மாற்ற தொண்​டர்​கள் தீவிர​மாக உழைக்க வேண்​டும்” என்​றார்.

எம்.பி.எண்ணிக்கையை 25 ஆண்டுக்கு உயர்த்தக் கூடாது: தமிழக காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்கத்தை பேரவைத் தலைவர் கைவிட்டதில் எந்த தவறும் இல்லை: உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in