21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்கத்தை பேரவைத் தலைவர் கைவிட்டதில் எந்த தவறும் இல்லை: உயர் நீதிமன்றம்

21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்கத்தை பேரவைத் தலைவர் கைவிட்டதில் எந்த தவறும் இல்லை: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: ‘தவெகவுக்கு ஆதர​வாக செயல்​பட்ட 21 அதிமுக எம்​எல்​ஏக்​களுக்கு எதி​ரான தகுதி நீக்க நடவடிக்​கையை கைவிடு​வது என சட்​டப்​பேர​வைத் தலை​வர் எடுத்த முடிவு சரி​யானது​தான்’ என சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில், தவெக அரசு கடந்த மே 13-ம் தேதி நம்​பிக்கை தீர்​மானம் கொண்டு வந்​தது. அப்​போது 25 அதிமுக எம்​எல்​ஏக்​கள் கொறடா உத்​தரவை மீறி தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர்.

இதையடுத்து, அவர்​களைத் தகுதி நீக்​கம் செய்​யக் கோரி பேர​வைத் தலை​வரிடம் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடிதம் அளித்தார்.

இதற்​கிடையே, அதில் 4 பேர் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்த நிலை​யில், எஞ்​சிய 21 பேரும் மன்​னிப்பு கோரியதால் அவர்​கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை திரும்பப் பெறு​வ​தாக பழனி​சாமி மீண்டும் பேர​வைத் தலைவருக்கு கடிதம் கொடுத்​தார்.

இதையடுத்து அவர்​கள் மீதான தகுதி நீக்க நடவடிக்​கையை பேர​வைத் தலை​வர் கைவிடு​வ​தாக உத்​தர​விட்​டார். பேர​வைத் தலை​வரின் இந்த உத்​தரவை எதிர்த்து வழக்​கறிஞர் பி.​வி.செல்​வக்​கு​மார், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், “கட்சி கொறடா உத்​தரவை மீறி செயல்​பட்ட அந்த நிமிடமே அவர்​களுக்​கும் அந்த கட்​சிக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்லை என்​கிற​போது, அவர்​கள் மன்​னிப்பு கோரி​விட்​டனர் எனக்​கூறி மீண்​டும் அவர்​களை கட்​சி​யில் சேர்த்​தது தவறு.

அவர்​களுக்கு எதி​ரான தகுதி நீக்க நடவடிக்​கையை பேர​வைத் தலை​வர் கைவிட்​டதும் தவறு” என கோரி​யிருந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்வு பிறப்​பித்​த உத்​தரவு: கட்சி மாறி வாக்​களித்த எம்​எல்​ஏக்​கள் 15 நாட்​களுக்​குள் மன்​னிப்பு கோரியதை, அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் சட்​டப்பூர்​வ​மாக ஏற்​றுள்​ளார்.

கட்​சிக்குள் நடை​பெறும் இந்த நிகழ்வு குறித்து வெளி​நபர் கேள்வி எழுப்ப முடி​யாது. பொதுச் செய​லாளரின் கடிதத்தை ஏற்று பேர​வைத் தலை​வரும் எம்​எல்​ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்​கையை கைவிட்​டுள்​ளார். இதில் எந்த தவறும் இல்​லை. அவர் எடுத்த முடிவு சரிதான்” என்று கூறி வழக்கை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளனர்.

21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்கத்தை பேரவைத் தலைவர் கைவிட்டதில் எந்த தவறும் இல்லை: உயர் நீதிமன்றம்
பட்டாசு தொழிலாளர் நலனை காப்பாற்றியது அரசு: பேரவையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in