“ஆட்சியில் பங்கு கோரிக்கை காங்கிரஸ் கேட்பதில் தவறில்லை” - திருமாவளவன் திடீர் கருத்து

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்

Updated on
1 min read

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்கிற உரிமையில்தான் அவர்கள் கேட்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, கட்டுக்கோப்பாக உள்ளது. இதே கட்டுக்கோப்புடன் தேர்தலை சந்திப்போம். கூட்டணி உருவாக்குவதிலும், அதை பாதுகாப்பதிலும் நாங்கள் அக்கறையோடு இருக்கிறோம்.

இண்டியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. அதை நான் வழிமொழிகிறேன்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்கிற உரிமையில்தான் அவர்கள் கேட்கிறார்கள். அதை தருவதா, வேண்டாமா என்பது பேச்சுவார்த்தையில் தான் தெரியும். கூட்டணி ஆட்சி தமிழகத்துக்கு பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதையும் அவர் விளக்குவார்.

எங்களைப் போல காங்கிரஸ் கட்சியும் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். இந்த கூட்டணி உருவாக்குவதில் எங்களுக்கு பங்கு இருக்கிறது.

மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல, ஒட்டுமொத்தமாக மக்களின் கோரிக்கை. இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து, முழுமையாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளோம். ஆனால், அதுதொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. ஆளும்கட்சியான திமுகவுக்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்</p></div>
திமுக விருப்ப மனு நாளை முதல் விநியோகம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in