அக். 15 முதல் 21-க்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

1,000 இடங்​களில் புதிதாக தானி​யங்கி மழை மானிகள் அமைக்க முடிவு
Updated on: 
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் சார்​பில், “வடகிழக்கு பரு​வ​மழைக்​கான பரு​வ​கால கண்​ணோட்ட மன்​றம் - 2026” தொடக்க விழா சென்னை தேசிய கடல்​சார் தொழில்​நுட்ப நிறு​வனத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் தமிழக வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் பி.சந்​தரமோகன் பங்​கேற்று பேசி​ய​தாவது: மாநில பேரிடர் மேலாண்​மைத்​துறை தற்​போது 1,400 தானி​யங்கி மழை​மானிகள் மற்​றும் 100 தானி​யங்கி வானிலை மையங்​களைக் கொண்​டுள்​ளது. மேலும், 1,000 தானி​யங்கி மழை​மானிகளைச் இந்த ஆண்டு நிறுவ திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. வடகிழக்​குப் பரு​வ​மழை​யின் போது 2 அடி முதல் 6 அடி வரை தண்​ணீர் தேங்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படும் 1,030 அதிக மற்​றும் மிக அதிக பாதிப்​புக்​குள்​ளாகும் இடங்​களை​யும், மேலும் 1,003 நடுத்தர பாதிப்​புக்​குள்​ளாகும் இடங்​களை​யும் தமிழ்​நாடு பேரிடர் மற்​றும் பாதிப்பு குறைப்பு முகமை அடை​யாளம் கண்​டுள்​ளது.

ஒவ்​வொரு இடத்​துக்​கும் வெள்​ளத் தணிப்பு மற்​றும் மீட்​புத் திட்​டங்​கள் தயார் செய்​யப்​பட்​டுள்​ளன. சென்னை மாநகருக்கு ஒருங்​கிணைந்த வெள்ள மேலாண்மை மையம் மூலம் 3 நாட்​களுக்கு முன்பே தெரு அளவி​லான வெள்ள முன்​னறி​விப்​பும் செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில் தொடர்ந்​து, இந்​திய வானிலை ஆய்வு மைய தலை​வர் மிருத்​யுஞ்​சய் மொகபத்ரா பேசும்​போது, ” தென்​மேற்கு பரு​வ​மழை வில​கிய பின்​னர், வடகிழக்கு பரு​வ​மழை இந்த மாதம் 3-வது வாரத்​தில் 15 முதல் 21-ம் தேதிக்​குள் தொடங்க வாய்ப்​புள்​ளது. தமிழகத்​தின் தெற்​குப் பகு​தி​களில் இயல்​பான மழை முதல் இயல்பை விட அதி​க​மான மழை​யும், மீத​முள்ள மாவட்​டங்​களின் இயல்பை விடக் குறை​வான மழை பெய்​ய​லாம்” என்​றார்.

இந்​நிகழ்ச்​சி​யில் வானிலை ஆய்வு மைய தென் மண்​டலத் தலை​வர் டி.சி​வானந்த பை, தேசிய கடல்​சார் தொழில்​நுட்ப நிறுவன இயக்​குநர் பாலாஜி ராமகிருஷ்ணன், புனே​ வானிலை ஆய்வு மையத்​தின் காலநிலை கண்​காணிப்பு மற்​றும் கணிப்​புத் துறை தலை​வர் ஓ.பி.ஸ்ரீஜித், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் ஆர்​.​வி.துரை உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

காற்​றழுத்த தாழ்வு மண்​டலம்: இதற்​கிடை​யில், “அக்​.12-ம் தேதி வாக்​கில் வடக்கு அந்​தமான் கடல் பகு​தி​யில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உரு​வாகி, அதன் தாக்​கத்​தால் அந்​த​மான் கடல் பகு​தி​யில் 13-ம் தேதி வாக்​கில் புதிய காற்​றழுத்த தாழ்​வுப்​பகுதி உரு​வாகும். இது 15-ம் தேதி வாக்​கில் காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெற குறை​வான வாய்ப்​பு​களே உள்​ளன” என்று இந்​தி​ய வானிலை ஆய்​வு மைய செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அக். 15 முதல் 21-க்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும்
ரூ.50 கோடி மதிப்புள்ள ஸ்ரீரங்கம் கோயில் நிலம் அபகரிப்பு: திமுக பகுதி செயலாளரைக் கைது செய்தது போலீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in