ரூ.50 கோடி மதிப்புள்ள ஸ்ரீரங்கம் கோயில் நிலம் அபகரிப்பு: திமுக பகுதி செயலாளரைக் கைது செய்தது போலீஸ்

ரங்கம் கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ராம்குமாரை மருத்துவப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீஸார்.படம்: ர. செல்வமுத்துகுமார்

ரங்கம் கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ராம்குமாரை மருத்துவப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீஸார்.படம்: ர. செல்வமுத்துகுமார்

Updated on: 
1 min read

திருச்சி: ஸ்ரீரங்​கம் கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.50 கோடிக்கும் மேல் மதிப்​புள்ள நிலத்தை அபகரித்​த​தாகப் பதிவு செய்​யப்​பட்ட வழக்​கில், திமுக பகு​திச் செய​லா​ளர் ராம்​கு​மார் கைது செய்​யப்​பட்​டார்.

திருச்சி திரு​வானைக்​காவல் சீனி​வாச நகரைச் சேர்ந்​தவர் ராம்​கு​மார். திமுக ரங்​கம் பகுதிச் செய​லா​ள​ராக உள்​ளார். இவர், ரங்​கம் காந்தி சாலை​யில் உள்ள ரூ.50 கோடிக்கு மேல் மதிப்​புடைய ரங்​க​நாதர் கோயில் சொத்தை அபகரித்​த​தாக கோயில் இணை ஆணை​யர் சிவ​ராம் ​கு​மார், திருச்சி மாநகர குற்​றப்​பிரி​வில் புகார் கொடுத்​திருந்​தார்.

அதன்​ அடிப்படையில் ராம்​கு​மார் மீதும் சொத்து தங்​களு​டையது என போலி ஆவணங்​கள் தயா​ரித்து ராம்​கு​மாரிடம் ரூ.2.90 கோடிக்கு விற்​ற​தாகச் சென்​னையைச் சேர்ந்த பத்​மஜா, விஜ​யா, சவுந்​தர​ராஜன், புதுச்​சேரியைச் சேர்ந்த ரங்​கவரதன், பத்​திரப் பதிவு செய்து கொடுத்த ரங்​கம் சார் ​ப​தி​வாளர் வனிதா ஆகி​யோர் மீதும் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வந்​தனர்.

இந்த வழக்​கில் முன்​ஜாமீன் கோரி உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் ராம்​கு​மார் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த வழக்கில் விசா​ரணைக்கு ஆஜராவதற்​காக நேற்று ராம்​கு​மார் வீட்​டில் இருந்து காரில் புறப்​பட்​டுச் சென்​றார். இதற்கிடையில், பஞ்​சப்​பூர் பேருந்து நிலை​யம் அருகே அவரது கார் மட்​டும் நின்று கொண்​டிருந்த​தால், அவரை சிலர் கடத்​திச் சென்​றிருக்​கலாம் என்று உறவினர்​கள் குற்​றம்​ சாட்​டினர்.

ஆனால், அவரை மாநகர குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் சண்​முகவேல் தலை​மையி​லான தனிப்​படை​யினர் கைது செய்து விசா​ரித்து வரு​வ​தாகக் காவல் துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. முன்​ஜாமீன் மனு மீதான விசா​ரணைக்கு சென்ற திமுக பிர​முகரைத் தனிப்​படை போலீ​ஸார் கைது செய்த சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி உள்​ளது.

இதையடுத்து, சார் பதிவாளர் வனிதாவையும் கைது செய்ய தனிப்படை போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனு தள்ளுபடி: உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் திமுக பகுதி செய​லா​ளர் ராம்​கு​மார், சார்​ ப​தி​வாளர் வனிதா ஆகி​யோர் தாக்​கல் செய்​திருந்த முன்ஜாமீன் மனுக்​களை நீதிபதி கே.​முரளி சங்​கர்​ நேற்​று தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டார்​.

<div class="paragraphs"><p>ரங்கம் கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ராம்குமாரை மருத்துவப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீஸார்.படம்: ர. செல்வமுத்துகுமார்</p></div>
தாராபுரத்தில் விஜய் பிரச்சாரத்தின்போது சத்யபாமா காதில் தெரிவித்தது என்ன? - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in