27 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க ஆக.5-ம் தேதி கடைசி நாள்

27 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க ஆக.5-ம் தேதி கடைசி நாள்
Updated on
1 min read

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: இந்து சமய அறநிலை​யத் துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள சட்​டப்​பிரிவு 46(3)-ல் நிர்​வாகத் திட்​டம் உள்ள 27 கோயில்​களுக்கு பரம்​பரை முறை வழி சாரா அறங்​காவலர்​கள் நியமனம் செய்​வதற்கு தகு​தி​யுள்ள நபர்​களிட​மிருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

அறங்​காவலர் நியமன அறி​விப்​பு, அறங்​காவலர் நியமனம் செய்​யப்​பட​வுள்ள திருக்​கோ​யில்​கள் விவரம், நிர்​வாகத் திட்ட விவரம், தகு​தி​கள், விண்​ணப்​பப் படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) இத்​துறை​யின் வலை​தளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி சுவாமி கோயில், மயி​லாப்​பூர் மாதவப் பெரு​மாள் கோயில், திரு​வல்​லிக்​கேணி திரு​வேட்​டீஸ்​வரர் கோயில், பெரியமேடு எல்​லம்​மன் கோயில், சூளை அங்​காள பரமேஸ்​வரி மற்​றும் காசி விசுவ​நாத சுவாமி கோயில், ஓட்​டேரி செல்​லபிள்​ளை​ராயர் கோயில், வில்​லி​வாக்​கம் சவுமிய தாமோதரப் பெரு​மாள் கோயில், கோவை மாவட்​டம் இடு​கம்​பாளை​யம் அனு​மந்​த​ராய சுவாமி கோயில் உட்பட 27 கோயில்​களுக்கு பரம்​பரை முறை வழி சாரா அறங்​காவலர்​கள் நியமனம் செய்​யப்பட உள்​ளனர்.

எனவே கோயிலுக்கு அறங்​காவல​ராக விண்​ணப்​பிப்​பவர்​கள் கோயிலுக்​கென ஏற்​படுத்​தப்​பட்ட நிர்​வாகத்​திட்ட சரத்​துக்​களை www.hrce.tn.gov.in இணை​யதளத்​தில் பார்​வை​யிட்டு படித்து அதன் அடிப்​படை​யில் விண்​ணப்​பிக்​கலாம். விண்​ணப்​பங்​களை இணைய வழி​யில் பூர்த்தி செய்தோ பதி​விறக்​கம் செய்தோ உரிய ஆவணங்​களு​டன் விண்​ணப்​பிக்​கலாம் அல்​லது பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்​களை நேரிலோ, விரைவு அஞ்​சல் மூல​மாகவோ சம்​பந்​தப்​பட்ட இணை ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு அனுப்​பலாம். ஆக.5-ம் தேதி மாலை 5.45 மணிக்​குள் பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்​களை அனுப்​ப வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

27 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க ஆக.5-ம் தேதி கடைசி நாள்
செந்தில் பாலாஜி, அவரது தம்பியை கைது செய்ய போலீஸார் தீவிரம்: கரூரில் முகாமிட்டு தீவிர சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in