‘நான் அமைச்சராகும் சூழ்நிலை இல்லை’ - சவுமியா அன்புமணி தகவல்

 சவுமியா அன்புமணி

சவுமியா அன்புமணி

Updated on: 
1 min read

சென்னை: ‘நான் அமைச்சராகும் சூழ்நிலைஇல்லை. தவெக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவோம்’ என்று சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்தது, தவெகவுக்கு சாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சவுமியா அன்புமணி அமைச்சராகப் போவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சவுமியா அன்புமணி பங்கேற்றார். அந்த நிகழ்வை தொகுத்து வழங்கியவர், சவுமியா அன்புமணியை ‘அமைச்சர்’ என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக சவுமியா அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண், என்னை அமைச்சர் என்று குறிப்பிட்டார். நான் உடனே, ‘நான் அமைச்சர் இல்லை; எம்எல்ஏ மட்டும்தான்’ என்று தெரிவித்துவிட்டேன். நான் அமைச்சராக வேண்டும் என்று நீங்கள் எல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்.

உங்களுடைய எதிர்பார்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அந்த மாதிரி எந்த ஒரு சூழ்நிலையும் இல்லை. நாங்கள் பொறுப்புள்ள கட்சியாக எப்போதுமே செயல்பட்டு அரசுக்கு நல்ல அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கு வோம்” என்றார்.

<div class="paragraphs"><p><em> சவுமியா அன்புமணி</em> </p></div>
முதல்வர் விஜய் நவ.14-ல் அம்பாசமுத்திரம் பயணம்? - சூடுபிடிக்கிறது இடைத்தேர்தல் களம்

X