''பச்சிளம் குழந்தை முதல் பெண் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை'' - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்

நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ‘கோவையில் பெண் காவலரை மதுக்கரை சிறப்பு காவல்துறை கமாண்டண்ட் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை. காவல் நிலையத்தில் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கோவையில் காவல் நிலைய அலுவலக அறையில் வைத்தே பெண் காவலரை மதுக்கரை சிறப்பு காவல்துறை கமாண்டண்ட் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்று போலியாக முழங்கும் திமுக ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையால் தெருதோறும் காமுகர்கள் பெருகி வருவது ஒருபுறமிருக்க, மறுபுறம் காவல் அதிகாரிகளே காமுகர்களாக மாறிவருவது பெண்கள் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாகக் கேள்விக்குறியாக்குகிறது.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை! காவல் நிலையத்தில் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை! தமிழகத்தின் வரலாற்றில் இப்படி ஒரு கொடூரத்தை இதுவரை யாரும் பார்த்ததும் இல்லை. இனி இந்தக் கேடுகெட்ட திமுக ஆட்சி தொடரப்போவதுமில்லை’ என்றார்.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்</p></div>
‘வெளியுறவுக் கொள்கையிலும் பெயிலியர் மாடல்’ - சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் ஆதங்கம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in