“திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்காது” - வைகோ நம்பிக்கை

வைகோ

வைகோ

Updated on
1 min read

சென்னை: “திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் தவெகவுக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்பது எனது திடமான கருத்தாகும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “இந்த தேர்தலில் திமுகவை விட தவெகவுக்கு அதிக இடங்களை கொடுத்த மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். தவெக ஆட்சியமைக்க இன்னும் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. எங்களிடம் அவர்கள் ஆதரவு கேட்க வரவே மாட்டார்கள். நாங்கள் மிகவும் உறுதிப்பாட்டோடு திமுக கூட்டணியில் நீடிக்கிறோம்.

எங்கள் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியோடும் தவெக தொடர்பு வைத்ததாக தெரியவில்லை, தொடர்பு வைக்கவும் முடியாது. இந்த கூட்டணியில் உள்ள யாரும் அசைகின்ற மனநிலையில் இல்லை.

மக்களின் தீர்ப்பு என்பது ஜனநாயகத்தில் மதிக்கப்பட வேண்டியது. திமுக ஆட்சியில் நடந்த அரும்பெரும் சாதனைகளை தொடர வேண்டிய கடமை புதிதாக அமையும் அரசுக்கு உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் தவெகவுக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்பது எனது திடமான கருத்தாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>வைகோ</p></div>
யார் இந்த ஜோசப் விஜய்? - தமிழகத்தில் தடம் பதித்த தவெக தலைவரின் பின்புலம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in