பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் வன்னியரசு விளக்கம்

பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் வன்னியரசு விளக்கம்
Updated on
1 min read

விழுப்புரம்: மலேசி​யா​வில் படித்து வரும் மாணவர் பார​தி​தாசனின் உயர்​கல்விக்​கான நிதி ஒதுக்​கீடு விவ​காரத்​தில் பல்​வேறு விமர்​சனங்​கள் எழுந்த நிலை​யில், இதில் அரசி​யல் செய்ய வேண்​டிய அவசி​யம் இல்லை என அமைச்​சர் வன்​னியரசு விளக்​கம் அளித்​துள்​ளார்.

தமிழக அரசின் அம்​பேத்​கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்​டத்தின்​கீழ் மலேசி​யா​வில் தமிழக மாணவர் பார​தி​தாசன் ஆராய்ச்சி படிப்பு படிக்​கிறார். இவர், தனக்கு 2-ம் ஆண்டுகல்வி நிதி கிடைக்​க​வில்லை என்​ப​தால் பல்​கலைக்​கழகத்​தில் இருந்து வெளி​யேற்​றப்​படும் சூழல் உரு​வாகி இருப்​ப​தாக கண்​ணீர் மல்க ஒரு வீடியோவை வெளி​யிட்​டுள்​ளார். இதற்கு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், “நிதியை வழங்க முடி​யாது என்​றால், முதல்​வர் வெளிப்​படை​யாக அறி​வித்ததால் திமுக​வும், தமிழக மக்​களும் படிக்க வைப் போம்” எனத் தெரி​வித்​திருந்தார்.

இதே​போல் எதிர்​கட்​சித் தலை​வர் உதயநி​தி​யும் கண்​டனம் தெரி​வித்​திருந்​தார். மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் சண்​முகம், “மாணவர் பார​தி​தாசன் நிதி விவ​காரத்​தில் முதல்​வர் தலை​யிட்டு தீர்வு காண வேண்​டும்” என வலி​யுறுத்​தி​யிருந்​தார்.

இந்​தச் சூழலில் திண்​டிவனத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் வன்​னியரசு கூறியது:அம்​பேத்​கர் அயலக கல்வி உதவித் திட்​டத்​தின் கீழ் திமுக ஆட்​சி​யில் கடந்​தாண்டு 609 மாணவர்​கள் விண்​ணப்​பித்​து, 601 பேர்தகுதி பெற்​றனர். ஆனால், 181 பேர்​தான் அனுப்​பப்​பட்​டனர். இதற்​காக ரூ.84 கோடி 89 லட்​சம்ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. 2026-27-ம் கல்​வி​யாண்​டில் 437 பேர் விண்​ணப்​பித்​தனர். இவர்​களில் 365 பேரை வெளி​நாட்​டுக்கு அனுப்பி உள்​ளோம். இதற்​காகரூ.131 கோடி ஒதுக்​கப்​பட்​டது.

தனி​யார் கலை அறி​வியல் கல்​லூரி​களில் படிக்​கும் எஸ்​சி, எஸ்டி மாணவ, மாணவி​களுக்​கான உதவித் தொகையை ரூ.4,250-ல் இருந்து ரூ.12 ஆயிர​மாக உயர்த்தியுள்ளோம். இதற்​காக ரூ.65 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. திமுக ஆட்​சி​யில் உயர்த்​த​வில்​லை. மாணவர் பார​தி​தாசன் தனது கல்​வியை முழு​மை​யாக முடித்துவர அரசு துணை​யாக இருக்கும்.

நிதி வரவில்லை என தெரிய​வந்​ததும், பல்​கலை​கழகத்​ கல்வி மற்றும் வாழ்​விட செல​வினத்​துக்​கு தலா ரூ.6 லட்​ச​ம் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது. மீதி நிதி​யும் வழங்​கப்​படும். எந்த பதற்​ற​மும் தேவை​யில்​லை. இதற்​காக யாரும் கவலைப்பட வேண்​டியதில்லை. முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் அரசி​யல் செய்ய வேண்​டிய அவசி​யமில்​லை. இவ்​வாறு அமைச்சர் கூறி​னார்​.

பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் வன்னியரசு விளக்கம்
“இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி” - அமைச்சர் ராஜ்மோகன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in