

கோவை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள சைக்கிள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பெரியார் அறிவுலக முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள சைக்கிள்கள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முதல்வர் விஜய்யின் ஆட்சியில் மக்களின் வரிப்பணம் முறையாக பயன்படுத்தப்படும். கடந்த முறையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து நடைமுறைகளும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றன. குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சாதகமாக எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
மாணவர்களுக்கு சைக்கிளுடன் தலைக்கவசம், குடிநீர் பாட்டிலும் வழங்கப்படும். முதல்வரின் விருப்பப்படி மாணவர்கள் விரும்பும் வகையிலான ஸ்போர்ட்ஸ் மாடல் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இவை தரமாகவும் உறுதியாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.