காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாது: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார்

Updated on
2 min read

திருநெல்வேலி/மதுரை: காவிரி விவ​காரத்​தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினால் ஒருமித்த கருத்து ஏற்படாது என்றும் உச்ச நீதி​மன்​றத்தை அணுகு​வோம் என்றும் அமைச்​சர் நிர்மல்குமார் தெரி​வித்​தார்.

திருநெல்​வேலி​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தமிழகத்​தில் மின்​சார கட்​ட​ணம் தொடர்​பாக, 3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட புகார்​கள் வந்​துள்​ள​

தாக, முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​திருப்​பது உண்​மையல்ல. பொது​மக்​களிடம் இருந்து அவ்​வாறு எந்​தப் புகாரும் வரவில்​லை. மாறாக, மின்​கட்டண உயர்வு தொடர்​பாக நிர்​வாக ரீதி​யாக தானாக முன்​வந்து ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

சுழற்சி முறை​யில் 3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மின் இணைப்பு​கள் ஆய்​வுக்​காக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளன. அதில், 50 இணைப்​பு​களில் மட்​டுமே கட்டண மாற்​றம் இருந்தது. அது​வும், வீடு​கள் பூட்​டப்​பட்​டிருந்த காரணத்​தி​னால் ஏற்​பட்ட மாற்​றமே தவிர வேறு காரணமில்லை. இந்த ஆய்​வுப் பணியை ஒரு வாரத்​தில் முடிக்க அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

கடந்த 5 ஆண்​டு​களில் திமுக ஆட்​சி​யில் மின் கட்​ட​ணம் கணக்​கெடுக்​கும் பணி​யாளர்​களை நியமிக்​க​வில்​லை. மின் பணி​யாளர்​களை நியமிக்​கும் பணியை தற்​போதைய அரசு மேற்கொண்டு வரு​கிறது. அதன்பிறகு மாதந்தோறும் மின்கட்டண கணக்​கெடுப்பு நடத்தப்​படும். கர்​நாட​கா​வில் காங்​கிரஸ், பாஜக உள்பட எந்தக் கட்சி ஆட்​சி​யில் இருந்​தா​லும், தமிழகத்துக்கு தண்​ணீர் வழங்​கக் கூடாது என்ற ஒரே நிலைப்​பாட்​டில்தான் இருக்கின்றன.

திமுக ஆட்​சி​யில் இருந்​த​போது, நமக்கு இருந்த வலு​வான சட்​டப்​பிடியை இழந்​து​விட்​டோம். திமுக​வும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளும் மத்​தி​யிலும், மாநிலத்​தி​லும் ஆட்​சி​யில் இருந்​த​போது​கூட தீர்ப்​பாய தீர்ப்பை முழு​மை​யாக அமல் படுத்த முடிய​வில்​லை. இரு மாநிலங்​களுக்கு இடையே​யான இப்​பிரச்​சினை​யில் மத்​திய அரசு சரி​யான முடிவை எடுக்க வேண்​டும்.

மத்​திய நீர்​வளத்​துறை அமைச்​சர் கர்​நாடகத்​துக்கு ஆதர​வாக பேசுவது கண்​டனத்​துக்​குரியது. காவிரி விவ​காரம் தொடர்​பாக அனைத்​துக் கட்​சிக் கூட்டத்தை கூட்​டு​வது குறித்​து, முதல்வர் விரை​வில் அறி​விப்​பார். அதே வேளை​யில் உச்ச நீதி​மன்​றம் மூல​மாக காவிரி விவகாரத்தை அணுகுவது​தான் சரியான வழி​முறை. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

இதேபோல் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி ​பிரச்​சினைக்கு தீர்வு காணும் வகை​யில் ஆக. 3-ல் உச்ச நீதின்​றத்​தில் வழக்கு தொடுக்க உள்​ளோம் என்று அறி​வித்​தவுடன் தற்​போது கர்​நாடக அரசு 3,500 கனஅடி திறந்​துள்​ளது. இன்​னும் தரவேண்​டிய 17 டிஎம்சி தண்​ணீரை தர மறுக்​கின்​றனர். இதற்கு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்​வது​தான் நிரந்தர தீர்​வாகும்​.எந்த வகை​யிலும் முதல்வர் தண்​ணீர் கொண்​டு​வந்து விடக்​கூ​டாது என்​ப​தில் எதிர்க்​கட்​சிகள் உறு​தி​யுடன் இருந்து எதிர்ப்பு தெரிவிக்​கின்​றன.

பாஜகவோடு சேர்ந்​து​ கொண்டு திமுக, அதி​முக தமிழகத்துக்கு எதி​ராக செயல்​படு​கின்​றன. இவர்​களை வைத்​துக்​கொண்டு அனைத்​துக்​கட்சி கூட்​டத்தை கூட்டி எப்​படி ஒருமித்த கருத்​தை ஏற்​படுத்த முடியும்​. வரும் பட்​ஜெட்​டில் ரூ.2,500 உரிமைத்​தொகை உள்பட சாத்​தி​யக்​கூறுள்ள திட்ட அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​படவுள்ளது. மேலும் விவ​சா​யிகளுக்கு கூடு​தலாக மின் இணைப்​பு​கள் வழங்​க​வும் ஆராய்ந்து வரு​கிறோம். அது தொடர்​பாக​வும் பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​படும். இவ்வாறு தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் நிர்மல்குமார் </p></div>
“இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கு இளைஞர் சக்தியே முக்கிய காரணம்” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in