

திண்டுக்கல்: ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்பொழுதும் கிடையாது. கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார் என திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி மேட்டுப்பட்டி பகுதியில் சமத்துவ பொங்கல்விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணிக் கட்சிகளின் உரிமை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்பொழுதும் கிடையாது. தனிப்பட்ட கட்சியன் ஆட்சி தான். கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார்.
சென்சார் போர்டு குறித்து முதல்வர் வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மை தான். பொங்கலுக்கு பெண்களுக்கு தித்திப்பான செய்தி உள்ளது எனக் கேள்விப்படுகிறேன். இதுகுறித்து தமிழக முதல்வர் தான் கூறவேண்டும்” இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.