தமிழகத்தில் 27 பிடிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

ரூ.2 லட்சம் முன்பணம் செலுத்தி இடம் தேர்வு செய்யலாம்
தமிழகத்தில் 27 பிடிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் காலி​யாக​வுள்ள 27 பிடிஎஸ் இடங்​களை நிரப்ப தேசிய மருத்​துவ ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது. அதன்​படி, ரூ.2 லட்​சம் முன்​பணம் செலுத்தி மாணவர்​கள் இடங்​களைத் தேர்வு செய்​ய​லாம் என்று மருத்​துவக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லுாரி​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு 6,600 எம்​பிபிஎஸ், 1,583 பிடிஎஸ் இடங்​களும், நிர்​வாக ஒதுக்​கீட்​டுக்கு 1,736 எம்​பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்​களும் உள்​ளன.

நடப்​பாண்​டில் இந்த படிப்​பு​களில் சேரு​வதற்கு 72,194 பேர் தரவரிசைப் பட்​டியலில் தகுதி பெற்​றனர். இது​வரை 4 கட்ட கலந்​தாய்வு முடிந்த நிலை​யில் 25 எம்​பிபிஎஸ் மற்​றும் 27 பிடிஎஸ் என 52 இடங்​கள் காலி​யாக உள்​ளன.

இந்த இடங்​களை நிரப்​புவதற்​கு, தேசிய மருத்​துவ ஆணை​யத்​திடம் (என்​எம்​சி) தமிழக அரசின் மருத்​துவ கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் அனு​மதி கேட்​டது. அதற்​கு, காலி​யாக​வுள்ள பிடிஎஸ் இடங்​களை மட்​டுமே நிரப்​பிக்​கொள்ள ஆணை​யம் அனு​மதி வழங்​கி​உள்​ளது.

அதன்​படி, ஏற்​கெனவே விண்​ணப்​பித்த மாணவர்​களில், நீட் தேர்​வில் 113 மதிப்​பெண் உடையோர் முதல், பிடிஎஸ் படிப்​புக்​கான இடத்தை https://tnmedicalselection.net என்ற இணை​யதளத்​தில் டிச.15-ம் தேதி வரை தேர்வு செய்​ய​லாம். அதற்​கான முடிவு​கள், 16-ம் தேதி வெளி​யிடப்​படும். இடங்​கள் பெற்​றவர்​கள், 20-ம் தேதி மாலை 5 மணிக்​குள் கல்​லூரி​களில் சேர வேண்​டும்.

இதுகுறித்​து, மருத்​துவ மாணவர் சேர்க்​கைக்​குழு செயலர் லோக​நாயகி கூறும்​போது, “தற்​போது 27 பிடிஎஸ் இடங்​களை நிரப்​புவதற்கு மட்​டுமே அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

சேர விரும்​பும் மாணவர்​கள் ரூ.2 லட்​சம் முன்​வைப்​புத் தொகை செலுத்த வேண்​டும். இடங்​கள் ஒதுக்​கீடு செய்​து, கல்​லூரி​களில் சேரும் மாணவர்​களுக்கு கல்வி கட்​ட​ணத்​தில், முன்​வைப்பு தொகை நிகர் செய்​யப்​படும்.

இடங்​கள் கிடைக்​காதவர்​களுக்​கு, அவர்​களின் வங்கி கணக்​குக்கே பணம் திரும்ப அனுப்​பப்​படும். இடம் ஒதுக்​கீடு செய்​த​பின், கல்​லூரி​யில் சேராதவர்​களுக்கு அப்​பணம் திருப்பி தரப்பட மாட்​டாது. காலி​யாக​வுள்ள எம்​பிபிஎஸ் இடங்​களை நிரப்​புவதற்​கும் தேசிய மருத்​துவ ஆணை​யத்​திடம் அனு​மதி கேட்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்​.

தமிழகத்தில் 27 பிடிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in