குற்றங்களைக் கண்டறிதல், மேம்பட்ட சேவை வழங்க தமிழக காவல் துறையில் புதிய மென்பொருள் நாளை முதல் அமல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழக காவல் துறை​யில் புதிய மென்​பொருள் ‘சிசிடிஎன்​எஸ் 2.0’ நாளை முதல் அமலுக்கு வரு​கிறது. வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்தி குற்​றங்​களைக் கண்​டறிதல், விசா​ரணை, மேற்​பார்வை மற்​றும் தரவு சார்ந்த தமிழக காவல் துறை​யின் செயல் திறனை மேம்​படுத்​து​வதற்​காக, குற்​றம் மற்​றும் குற்​ற​வாளி​கள் கண்​காணிப்பு வலைப்​பின்​னல் அமைப்பு (சிசிடிஎன்​எஸ் 2.0) மென்​பொருள் ரூ.124.37 கோடி​யில் உரு​வாக்​கப்​பட்டு காவல் துறை​யில் பயன்​பாட்​டுக்கு வர​வுள்​ளது.

சிசிடிஎன்​எஸ் 2.0 மென்​பொருள் (ஏற்​கெனவே 1.0 உள்​ளது) காவல் துறை​யில் ஒரு மேம்​பட்ட தொழில்​நுட்​ப​மாகும். இதில் சமு​தாய சேவைப் பதிவேடு (சிஎஸ்​ஆர்), முதல் தகவல் அறிக்கை (எஃப்​ஐஆர்) மற்​றும் முதல்​நிலை விசா​ரணை ஆகிய​வற்​றைப் பதிவுசெய்ய இயலும்.

மேலும் முதல் தகவல் அறிக்​கை, குற்​றப்​பத்​திரிகை, விசா​ரணை அறிக்​கைகள் ஆகிய​வற்றை ஆன்​லைனில் உடனடி​யாக நீதி​மன்​றத்​துக்கு அனுப்ப முடி​யும். இதே​போல், சிசிடிஎன்​எஸ் 2.0 மென் ​பொருள் குற்​ற​வியல் நீதி அமைப்​பின் மற்ற இணை அமைப்​பு​களான குற்ற வழக்கு தொடர்​புத் துறை, சிறைத் துறை, தடய​வியல் மற்​றும் சுகா​தா​ரத் துறை​யுடன் ஒருங்​கிணைக்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இது காவல் நிலை​யங்​களின் பணி​யின் வேகத்தை விரைவுபடுத்​த​வும், வெளிப்​படைத்​தன்​மை​யைக் கொண்​டு​வர​வும் சிறந்த பொறுப்​புணர்வை உறுதி செய்​ய​வும் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் மூத்த அதி​காரி​கள் காவல் நிலை​யங்​களில் செய்​யப்​படும் பணி​களை உடனுக்​குடன் திறம்பட கண்​காணிக்க வசதி​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. மேலும் மூத்த குடிமக்​கள் மற்​றும் பூட்​டிய வீடு​கள் குறித்த தகவல்​களை பதிவு செய்​வது மற்​றும் தனி அடை​யாளத்​துடன் கூடிய பொருட்​களை தேடு​வது போன்​றவற்​றுக்​கான சிறந்த வசதி​கள் வழங்​கப்​படு​கின்​றன.

இந்த இணை​யதளத்​தின் மூலம் பொது​மக்​கள், ஆன்​லைனில் புகாரைப்பதிவு செய்​தல், சமு​தாய சேவைப் பதிவேடு, முதல் தகவல் அறிக்கை மற்​றும் ஆன்​லைன் புகார் ஆகிய​வற்​றின் தற்​போதைய நிலையை அறிதல், கைது செய்​யப்​பட்ட நபரின் விவரங்​களை அறிதல், காணா​மல் போன மற்​றும் அடை​யாளம் தெரி​யாத இறந்த நபர்​களின் தகவல்​களை தேடு​தல், காவல் சரி​பார்ப்பு மற்​றும் தொலைந்த ஆவண அறிக்கை ஆகிய​வற்​றைப் பெறு​தல், விபத்து ஆவணங்​களைப் பதி​விறக்குதல் ஆகிய சேவை​களும் பெறலாம்.

இந்த திட்​டங்​களின் செயல் வடிவமுக்​கி​யத்​து​வம், தொழில்​நுட்ப ஆளுமை மற்​றும் காவல்​துறை நவீனமய​மாக்​கல் முயற்​சிகளு​டன் அவற்​றின் ஒருங்​கிணைப்பு ஆகிய​வற்​றைக் கருத்​தில் கொண்​டு, குற்​றம் மற்​றும் குற்​ற​வாளி​கள் கண்​காணிப்பு வலைப்​பின்​னல் அமைப்பு சிசிடிஎன்​எஸ் (CCTNS) 2.0 மென்​பொருள் மற்​றும் டிஜிட்​டல் கைரேகை சேகரிப்பு அமைப்பு ஆகிய இரு திட்​டங்​களும் மாநிலம் முழு​வதும் உள்ள அனைத்து காவல் நிலை​யங்​களி​லும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யும் அனைத்து காவல் சிறப்பு பிரிவு​களி​லும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லி​னால்​ நாளை (26-ம்​ தேதி) இந்த புதிய மென்பொருள் சேவை தொடங்​கி வைக்கப்​பட உள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
இடைநீக்கத்தை ரத்து செய்த விவகாரத்தில் ஆளுநர், அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு நோட்டீஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in