கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு ஒப்புதல் பெற புதிய வழிகாட்டு நெறிமுறை

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு ஒப்புதல் பெற புதிய வழிகாட்டு நெறிமுறை
Updated on: 
1 min read

சென்னை: கல்​வி​யியல் கல்​லூரி​களில் பணி​யமர்த்​தப்​படும் ஆசிரியர்​களின் கல்​வித் தகுதிக்கு ஒப்​புதல் அளிக்க புதிய வழிகாட்டு நெறி​முறைகளை ஆசி​ரியர் கல்​வி​யியல் பல்கலைக்கழகம் நிர்​ணயித்​துள்​ளது.

தமிழ்​நாடு ஆசி​ரியர் கல்​வியியல் பல்​கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எம்.கண்மணி, கல்​வி​யியல் கல்​லூரி​களின் முதல்வர்களுக்கு அனுப்​பியுள்ள சுற்றறிக்​கை​:

ஆசி​ரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகத்​துடன் இணைப்பு அங்​கீகாரம் பெற்​றுள்ள கல்​வி​யியல் கல்​லூரி​களில் கல்​வித் தகுதி ஒப்​புதல் பெறும் ஆசி​ரியர்​கள் (உதவி பேராசி​ரியர்​கள், இணை பேராசி​ரியர்​கள், பேராசி​ரியர்​கள்) தங்​கள் அசல் சான்​றிதழ்​களைச் சரிபார்ப்பு செய்​யும் நாட்​களில் பல்​கலைக்​கழகத்​துக்​குக் கண்​டிப்​பாக நேரில் வந்து பதிவாளரிடம் அசல் சான்​றிதழ்​களைக் காண்​பித்த பின்​னரே அச்​சான்​றிதழ்​கள் சரிபார்ப்பு செய்​யப்​படும்.

ஒப்​புதல் கோரி சமர்ப்​பிக்​கப்​படும் விண்​ணப்​பங்​களு​டன் கல்​லூரி நிர்​வாகம் உறுதி​மொழி படிவத்தை ரூ.100 மதிப்​புள்ள முத்​திரைத்​தாளில் சமர்ப்​பிக்க வேண்​டும்.

மேலும், விண்​ணப்​பத்​தில் கல்​வித் தகுதி சான்​றிதழ்​களின் உண்​மைத்​தன்மை சான்​றிதழ் (Genuineness Certificate) அல்​லது உண்​மைத்​தன்மை சான்​றிதழுக்கு விண்​ணப்​பித்த விண்​ணப்ப நகல் மற்​றும் வரைவோலை ரசீது நகலை இணைக்க வேண்​டும்.

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு ஒப்புதல் பெற புதிய வழிகாட்டு நெறிமுறை
திருப்பரங்குன்றத்தில் டிச.15 வரை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி

X