சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் குறைதீர்க்க புதிய கட்டுப்பாட்டு அறை: அமைச்சர் வன்னி அரசு திறந்து வைத்தார்

சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் குறைதீர்க்க புதிய கட்டுப்பாட்டு அறை: அமைச்சர் வன்னி அரசு திறந்து வைத்தார்
Updated on
1 min read

சென்னை: சமூகநீதி விடு​தி​களில் தங்கி பயிலும் மாணவர்​களின் குறை​களை நிவர்த்தி செய்​யும் வகை​யில் புதிய கட்​டுப்​பாட்டு அறையை அமைச்​சர் வன்னி அரசு நேற்று திறந்து வைத்​தார்.

சமூகநீதி விடு​தி​களில் குறை​களை நேரடி​யாக விரைந்து நிவர்த்தி செய்​யும் வகை​யில் சென்னை எழில​கத்​தில் உள்ள ஆதி​தி​ரா​விடர் நல இயக்​குநரகத்​தில் 24 மணி நேர​மும் செயல்​படும் கட்​டுப்பாட்டு அறையை சமூகநீதி துறை அமைச்​சர் வன்னி அரசு நேற்று திறந்து வைத்​தார்.

புதி​தாக திறக்​கப்​பட்​டுள்ள கட்​டுப்​பாட்டு அறையை 7338801456 என்ற வாட்ஸ் அப் எண்​ணில் மாணவர்​கள் புகார்​களைப் பதிவு செய்​ய​லாம். இதில் பெறப்​படும் ஒவ்​வொரு புகாரும் அதி​காரி​களின் கவனத்​துக்கு கொண்டு சென்​று, உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்.

நிவர்த்தி செய்​யப்​பட்ட புகார்​கள் குறித்து இயக்​குனர் தினசரி ஆய்வு மேற்​கொண்​டு, அந்த அறிக்கை அமைச்​சருக்கு வாரந்​தோறும் சமர்ப்​பிக்​கப்​படும் என்​றும் அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் குறைதீர்க்க புதிய கட்டுப்பாட்டு அறை: அமைச்சர் வன்னி அரசு திறந்து வைத்தார்
ரேஷன் கடைகள், கிடங்குகளை ஆய்வு செய்ய பொது விநியோகத் திட்ட செல்போன் செயலி தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in