புதிய கட்டிட விதிகள் படி கூடுதல் பரப்புக்கு மட்டுமே கட்டணம்: வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகத் துறைகள் அறிவுறுத்தல்

உயரம் 19.50 மீட்டருக்கு மேல் கூடாது
புதிய கட்டிட விதிகள் படி கூடுதல் பரப்புக்கு மட்டுமே கட்டணம்: வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகத் துறைகள் அறிவுறுத்தல்
Updated on: 
1 min read

சென்னை: டிடிசிபி ஆணையர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு வீட்டு வசதி துறை, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கிர்லோஷ்குமார் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘‘புதிய கட்டிட விதிகள்படி கடந்த அக். 26-ம் தேதிக்கு முன் கட்டிடத்துக்கான வரைபட அனுமதி பெறப்பட்டிருக்கும் பட்சத்தில், தற்போதுள்ள அதிகபட்ச உயரம் 18.3 மீட்டரில் இருந்து, புதிதாக அனுமதிக்கப்பட் டுள்ள 19.50 மீ. உயரத்துக்கு என தனியாக அனுமதி பெற வேண்டியதில்லை. கட்டிடத்தின் அதிகபட்ச உயரம் 19.50 மீட்டருக்கு மேல் அதிகரிக்கக்கூடாது’’ என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், மாநகராட்சிகள், நகராட்சிகளின் ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர், மதுசூதன் ரெட்டி அனுப்பிய கடிதத்தில், ‘‘திருத்தப்பட்ட அனுமதி விண்ணப்பங்களில் உள்ள கட்டணம் செலுத்தப்பட்ட பரப்பளவைக் கழித்துவிட்டு, புதிதாக கோரப்படும் கூடுதல் கட்டிட பரப்புக்கு மட்டும் கட்டணத்தை வசூலிக்கும்படி உத்தரவிடப்படு கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

புதிய கட்டிட விதிகள் படி கூடுதல் பரப்புக்கு மட்டுமே கட்டணம்: வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகத் துறைகள் அறிவுறுத்தல்
சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் வந்ததா? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

X