சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் வந்ததா? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் வந்ததா? - மு.க.ஸ்டாலின் விளக்கம்
Updated on: 
1 min read

சென்னை: ‘சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்​பிதழ் வந்​ததா?’ என்​பது குறித்து திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின் விளக்​கம் அளித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு முன்பு வரை நாடாளு​மன்ற எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி​யும், திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லினும் சகோ​தரத்​து​வத்​துடன் பழகி வந்​தனர். ஆனால் தேர்​தல் நேரத்​தில் சீட் பகிர்வு தொடர்​பாக பேச்சு​வார்த்தை நடத்த ராகுல் காந்​தியை ஸ்டா​லின் பலமுறை தொடர்பு கொண்​டும் அவர் ஏற்​க​வில்லை எனக் கூறப்​படு​கிறது. அதேபோல். தேர்​தல் பிரச்​சா​ரத்​திலும் இரு​வரும் இணைந்து பங்​கேற்​க​வில்லை.

தேர்​தல் முடிவு​கள் தவெகவுக்கு சாதக​மாக அமைந்​தது. இதையடுத்து திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வெளியேறி முதல் ஆளாக தவெகவுக்கு காங்​கிரஸ் ஆதரவு கொடுத்தது. மேலும், மாநில தலை​வர் மாணிக்கம் தாகூர் போன்​றவர்​கள் திமுக தலை​மையை கடுமையாக விமர்​சித்து வரு​கின்​றனர். திமுக தலை​வர்​களும் காங்​கிரஸை விமர்​சனம் செய்​கின்றனர். இந்​தச் சூழலில், டெல்​லி​யில் நேற்று முன்தினம் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி எழுதிய நூல் வெளியீட்டு விழா நடை​பெற்​றது.

இதில், முதல்​வர் விஜய் உள்​ளிட்ட தலை​வர்​கள் கலந்து கொண்​டனர். இதற்​கிடையே, இந்த நிகழ்​வில் பங்​கேற்​குமாறு அழைப்பு விடுப்​ப​தற்​காக மு.க.ஸ்டா​லினுடன் பேச ராகுல் காந்தி முயன்றதாகவும், ஆனால், ஸ்டா​லின் பேச விரும்​பாமல் அழைப்​பைத் தவிர்த்​து​விட்​டார் எனவும் செய்​தி​கள் வெளியாகின. இது பரபரப்​பை ஏற்படுத்தியது.

இது​குறித்து அண்ணா அறிவாலயத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் ஸ்டா​லின் கூறும்​போது, “சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா​வில் பங்​கேற்க வேண்டும் என எனக்கு அழைப்​பிதழ் வர​வில்லை. தொலைபேசி​யில் என்​னுடைய உதவியாளரிடம் தெரி​வித்​தனர். அதன் அடிப்​படை​யில் வாழ்த்து தெரி​வித்​தேன். கடிதமும் அனுப்பி இருக்​கிறேன்” என்றார்.

முன்​னதாக இது​குறித்து திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, “அழைப்பை ஏற்​ப​தும் ஏற்​காததும் எங்​களு​டைய விருப்​பம். ஏற்​குமாறு யாரும் கட்​டாயப்​படுத்த முடி​யாது. அழைப்பு வந்​திருக்​கலாம். ஏனென்​றால் சோனியா காந்தி எங்​கள் தலை​வர் மீது மிகுந்த மரியாதை கொண்​ட​வர். அதுபோல்​தான் எங்​களது தலை​வரும். நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொள்வது என்​பது வசதி, சூழ்​நிலைக்கு ஏற்ப அமையும்” என்​றார்.

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் வந்ததா? - மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழக காவல் துறையில் புதிதாக இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்

X