திமுக அரசுக்கு எதிராக மார்ச் 17-ல் என்டிஏ கட்சிகள் ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

இபிஎஸ்

இபிஎஸ்

Updated on
1 min read

சென்னை: 'தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து வரும் மார்ச் 17-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘விடியா திமுக அரசு பதவியேற்ற நாள்முதல், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும்; பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும்; ஆளும் கட்சியினரின் அராஜகங்கள், வன்முறைகள், சட்ட விரோதச் செயல்கள் குறித்தும், அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும், தொடர்ச்சியாக தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் குறித்த செய்திகளே, நாள்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, சட்டம் -ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்துத் தாக்குதல், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது.

தற்போது, போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழ் நாட்டில் நடைபெறும் மக்கள் விரோதச் செயல்கள் அனைத்தையும் விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

கடந்த ஐந்தாண்டுகால விடியா திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் இத்தனை அவலங்களும் தொடரக் கூடாது. மக்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதற்கெல்லாம் விரைவில் விடிவு காலம் வரஉள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த வகையில், விடியா திமுக அரசு பதவியேற்ற நாள் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இணைந்து வருகின்ற செவ்வாய்க்கிழமை (17.03.2026) அன்று அனைத்து மாவட்ட வருவாய் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>இபிஎஸ்</p></div>
இந்தியாவின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்யத் தயார்: கனடா பிரதமர் மார்க் கார்னி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in