ஏஐ மாநாட்டில் காங்கிரஸார் போராட்டம் அநாகரிகமானது: என்டிஏ தலைவர்கள் கண்டனம்

ஏஐ மாநாட்டில் காங்கிரஸார் போராட்டம் அநாகரிகமானது: என்டிஏ தலைவர்கள் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: டெல்​லி​ நகரில் நடை​பெற்று வரும் செயற்கை நுண்​ணறிவு மாநாட்டு அரங்​குக்​குள் இளைஞர் காங்​கிரஸ் நிர்​வாகி​கள் மேலாடையின்றி நடத்திய போராட்​டம் அநாகரி​க​மானது என தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: உலக நாடு​களின் தலை​வர்​கள், செயற்கை நுண்​ணறிவு மற்​றும் தொழில்​நுட்ப நிறுவன அதி​காரி​கள், கல்​வி​யாளர்​கள், ஆராய்ச்​சி​யாளர்​கள் பங்​கேற்​பில் நடத்​தப்​பட்டு வரும் செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாட்​டில், இந்​தி​யா​வின் பெரு​மைக்கு களங்​கம் ஏற்​படுத்​தும் வகை​யில் காங்​கிரஸ் கட்​சி​யின் இளைஞரணி​யினர் செயல்​பட்​டுள்​ளது மிகுந்த கண்​டனத்​துக்​குரியது.

நாடாளு​மன்​றம் தொடங்கி ஏஐ மாநாடு வரை எங்​கும், எதி​லும் அடாவடித்​தனத்​தோடு செயல்​பட்​டு, மக்​களுக்கு தலைகுனிவை ஏற்​படுத்த முயற்​சிக்​கும் காங்​கிரஸ் தனது அராஜக போக்​காலே மேன்​மேலும் வீழும்.

பாமக தலை​வர் அன்​புமணி: இந்​தி​யா​வை​யும், உலகை​யும் அடுத்த நூற்​றாண்​டுக்கு அழைத்​துச் செல்​வது எவ்​வாறு என்​பது குறித்து விவா​திக்​கும் மாநாட்​டில், நம் கலாச்​சா​ரத்​தை​யும், பண்​பாட்​டை​யும் பல நூற்​றாண்​டு​களுக்கு பின்​னோக்கி அழைத்​துச் செல்​வது போன்ற செயலில் ஈடு​பட்​டதன் மூலம் காங்​கிரஸ் கட்சி எங்கு இருக்​கிறது என்​பதை உலகுக்கு காட்​டி​யிருக்​கிறது. இந்​தி​யா​வுக்கு பெருமை சேர்க்​கக் கூடிய நிகழ்​வில் காங்​கிரஸ் கட்​சி​யினர் செயல்​பாடு அநாகரி​க​மானது. இதன்மூலம் தங்​களுக்கு மட்​டுமின்​றி, ஒட்​டுமொத்த இந்​தி​யா​வுக்​கும் அவப்​பெயரை தேடித் தந்​திருக்​கிறார்​கள்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: இந்​தி​யா​வின் உயர்வை மற்ற வளர்ந்த நாடு​களிடம் எடுத்​து​காட்​டக் கூடிய மாநாட்​டில், நாட்​டின் புகழுக்கு களங்​கம் விளைவிக்​கும் வகை​யில் இளைஞர் காங்​கிரஸார் நடந்​து கொண்ட செயலால் நாடே தலைகுனி​கிறது. இந்த அநாகரி​க​மான செயல்​பாடு அக்​கட்​சி​யின் தரத்தை வெளிப்​படுத்​துகிறது.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: வளர்ச்​சி​யடைந்த இந்​தியா எனும் இலக்கை நோக்கி நடத்​தப்​பட்ட மாநாட்​டில் காங்​கிரஸ் கட்​சி​யினர் அரங்​கேற்​றி​யிருக்​கும் அநாகரிக​மான செயல் கடும் கண்​டனத்​துக்குரியது. கழுதை தேய்ந்து கட்​டெறும்​பானகதையைப் போல கரைந்து கொண்​டிருக்​கும் காங்​கிரஸ் கட்​சி​யின் கீழ்த்​தர​மான செயல்​கள், இந்​திய நாட்​டின் மீதான அக்​கட்​சி​யின் தேச​விரோத எண்​ணத்​தை காட்​டுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஏஐ மாநாட்டில் காங்கிரஸார் போராட்டம் அநாகரிகமானது: என்டிஏ தலைவர்கள் கண்டனம்
நகராட்சி நிர்வாகத் துறை முறைகேட்டில் அதிகாரிகளுக்கும் தொடர்பு: அமலாக்கத் துறை மீண்டும் கடிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in