திருப்பரங்குன்றம் கோயிலில் மார்ச் 1-ல் பிரதமர் சுவாமி தரிசனம்: தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட தேசிய பாதுகாப்புப் படை  அதிகாரிகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

Updated on
1 min read

மதுரை / சென்னை: மதுரை​யில் மார்ச் 1-ல் நடை​பெறும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசுகிறார்.

தொடர்ந்​து, மதுரை எய்ம்ஸ் கட்​டிடம், புதிய ரயில் நிலை​யங்​கள், புதிய சாலைப் பணி​கள் திறப்பு விழா​வில் பங்​கேற்​கிறார்.

இதற்​காக மண்​டேலா நகரில் அரசி​யல் விழா, அரசு விழாவுக்கு 2 மேடைகள் அமைக்​கும் பணி​கள் நடந்து வரு​கின்​றன.

இது தொடர்​பாக மதுரை ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், காவல் ஆணை​யர் லோக​நாதன், எஸ்​.பி. அரவிந்த் ஆகியோர் கொண்ட குழு​வினர் ஆய்வு மேற்​கொண்​டு, அறிக்கை சமர்ப்​பித்​தனர்.

இதற்கு தேசிய பாது​காப்​புப் படை​யினர் ஒப்​புதல் அளிக்​காத​தால், அரசு விழாவை விமான நிலை​யம் அரு​கில் நடத்த முடி​வெடுக்​கப்​பட்​டது. இதற்​காக தனி​யாக மேடை​யும் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. மேலும், பிரதமர் மோடி திருப்​பரங்​குன்​றம் முரு​கன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​கிறார்.

இதையொட்​டி, பாது​காப்பு ஏற்​பாடு​கள் தொடர்​பாக திருப்​பரங்​குன்​றம் கோயி​லில் தேசிய பாது​காப்பு படையைச் சேர்ந்த 8 பேர் அடங்​கிய குழு​வினர் நேற்று ஆய்வு மேற்​கொண்​டதுடன், காவல் ஆணை​யர் ஜெ.லோக​நாதன், துணை ஆணை​யர் இனிகோ திவ்​யன் ஆகியோ​ருடன் ஆலோ​சனை நடத்​தினர்.

சிவப்பு மண்டலம்...

சென்னை கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் வரும் 28-ம் தேதி இரவு தங்​கு​கிறார். இதையொட்​டி, சென்​னை​யில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

வரும் 28 மற்​றும் மார்ச் 1-ம் தேதி​யில் பாது​காப்பு காரணங்​களுக்​காக மீனம்​பாக்​கம், கிண்டி பகு​தி​கள் மற்​றும் பிரதமர் வரும் வழித்​தடங்​கள் சிவப்பு மண்​டல​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. மேலும், ஆளுநர் மாளி​கையை சுற்​றி​லும் ட்ரோன் கேம​ராக்​கள் மற்​றும் ஆளில்லா வான்​வழி கருவி​கள் பறக்கவிட தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட தேசிய பாதுகாப்புப் படை  அதிகாரிகள். | <em>படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி</em> |</p></div>
“டெல்லியில் இருந்து ஒருபோதும் தமிழகத்தை ஆளும் நிலை வரக்கூடாது” - முதல்வர் ஸ்டாலின் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in