மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: 2025-26-ம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தவர்களின் விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) செயலர் ராகவ் லங்கர் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025-26-ம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த மாணவர்களின் விவரங்கள், படிப்பின்விவரம், இடஒதுக்கீடு விவரம் உள்ளிட்டவற்றை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவேற்றப்பட்ட மாணவர்களின் சேர்க்கை மட்டுமே செல்லும். அவர்கள் மட்டுமே எதிர்காலத்தில் மருத்துவப் பணிகளை மேற்கொள்வதற்கு பதிவு செய்ய முடியும். அதனை சம்பந்தப்பட்ட மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பெயர்கள் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை அணுக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்
முதல்வருக்கான புதிய அலுவலகம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டைவிட 32% குறைவாக டெண்டர்: விரைவில் ஒப்பந்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in