தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் 22.22 ஆக உயர்வு: நாராயணன் திருப்பதி தகவல்

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் 22.22 ஆக உயர்வு: நாராயணன் திருப்பதி தகவல்
Updated on
1 min read

சென்னை: பாஜக மாநில தலைமை செய்தி தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 2024 நாடாளு​மன்​றத் தேர்​தலில் பாஜக 23 இடங்​களில் போட்​டி​யிட்​டது.

அந்​தத் தொகு​தி​களில் பதி​வான 2.50 கோடி வாக்​கு​களில், பாஜக 49.18 லட்​சம் வாக்​கு​களைப் பெற்​றது. இது சராசரி​யாக 19.62 சதவீதம் ஆகும். தற்​போது, நடந்து முடிந்​துள்ள 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், பாஜக உள்​ளிட்ட கூட்​டணி கட்​சி​யினர் தாமரை சின்​னத்​தில் 33 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டனர்.

அந்​தத் தொகு​தி​களில் பதி​வான 66 லட்​சம் வாக்​கு​களில், பாஜக 14.66 லட்​சம் வாக்​கு​களைப் பெற்​றுள்​ளது. இதன் மூலம், பாஜக​வின் வாக்கு சதவீதம் 22.22 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது.

2024-ல் இருந்த 19.62 சதவீதத்​திலிருந்​து, தற்​போது, 22.22 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது, 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 133 இடங்​களில் வெற்றி பெற்ற திமுக, இப்​போது வெறும் 59 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றுள்​ளது.

அதன் வாக்கு வங்கி 48 சதவீதத்​திலிருந்து 24 சதவீத​மாக சரிந்​துள்​ளது. தற்​போது, பாஜகவை விட வெறும் 1.8 சதவீதம் மட்​டுமே திமுக கூடு​தல் வாக்​கு​களைப் பெற்​றுள்​ளது.

தமிழகத்​தில் தவெக-வை தவிர, தனது வாக்கு சதவீதத்தை உயர்த்​தியுள்ள ஒரே கட்சி பாஜக மட்​டுமே. பாஜகவை மதவாதக் கட்சி என்று விமர்​சிக்​கும் திமுக​தான், உண்​மை​யில் மதவாத அரசி​யலை முன்​னெடுத்து வருகிறது என்​பது நிரூபன​மாகி உள்​ளது என்றார்.

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் 22.22 ஆக உயர்வு: நாராயணன் திருப்பதி தகவல்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மாதவரம் - மூலக்கடை வந்தடைந்த சேர்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in