“விஜய் அனுபவம் குறைந்தவர்தான்; குறையும் இருக்கிறது” - நாஞ்சில் சம்பத்

“விஜய் அனுபவம் குறைந்தவர்தான்; குறையும் இருக்கிறது” - நாஞ்சில் சம்பத்
Updated on
1 min read

சிவகங்கை: விஜய் அனுபவம் குறைந்தவர் தான்; அவரிடம் குறையும் இருக் கிறது என, தவெக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். சிவகங்கையில் தவெக கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

அதில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: திமுகவுக்கு எதிராக தொலைக்காட்சியை உடைத் தார் கமலஹாசன். அந்த கட்சி அறிவாலய வாசலில் படுத்துக் கிடக்கிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வந்தவர்கள் பாதியிலேயே முடங்கிவிட்டனர். ஆன்மிக அரசியல் என்று சொன்ன ரஜினி காந்தால் வர முடியவில்லை.

ஆனால், எங்கள் ஸ்டாராக விஜய் வந்துள்ளார். விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்காக மட்டும் அல்ல வேட்டாகவும் மாறும். விஜய் அனுபவம் குறைந்தவர்தான், அவரிடம் குறையும் இருக்கிறது. ஆனால், அவரது வருகை உங்களை ஆத்திரப்பட வைக்கிறது.

தனிநபர் விமர்சனத்தை முன் வைக்கிறீர்கள். இது மிக மோசமான, மட்டமான, மலிவான அரசியல். விஜய்யை களங்கப்படுத்தவும் முடியாது, கறைப்படுத்தவும் முடியாது. பழனிசாமி விரைவில் பாஜகவில் சேர்ந்துவிடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

“விஜய் அனுபவம் குறைந்தவர்தான்; குறையும் இருக்கிறது” - நாஞ்சில் சம்பத்
ஹிஸ்புல்லாவுக்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in