இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
Updated on
1 min read

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலைவர் நல்லகண்ணு. அவருக்கு 100 வயதாகும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்​டில் தவறி விழுந்ததில், அவரது தலை​யில் காயம் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, சென்னை நந்​தனத்​தில் உள்ள வெங்​கடேஸ்​வரா மருத்துவமனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அவருக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்து வந்​தனர்.

அவருக்கு ஏற்​கெனவே இருந்த நுரை​யீரல் பிரச்​சினை காரண​மாக, சுவாசிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​ட​தால், மேல்​சிகிச்​சைக்​காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்​றப்​பட்​டார்.

உடல்​நிலை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டதை தொடர்ந்​து, அவர் வீடு திரும்​பி​னார். பின்​னர், உணவு கொடுப்​ப​தற்​காக அவரது வயிற்​றுப் பகு​தி​யில் பொருத்​தப்​பட்ட குழா​யில் அடைப்பு ஏற்​பட்​ட​தால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை​யில் சேர்க்​கப்​பட்​டார்.

அந்த பிரச்​சினை சரிசெய்​யப்​பட்ட பிறகு, வீடு திரும்பினார். இந்​நிலை​யில், சுவாசிக்க உதவி​யாக பொருத்​தப்​பட்​டிருந்த டிரக்​கி​யாஸ்​டமி கரு​வி​யின் குழாயை மாற்​று​வதற்​காக, நேற்று காலை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை​யில் அவர் மீண்​டும் சேர்க்​கப்​பட்​டார். அந்த குழாய் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
பிரதமர் மோடி​யுடன் மெஸ்ஸி இன்று சந்​திப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in