பிரதமர் மோடி​யுடன் மெஸ்ஸி இன்று சந்​திப்பு

பிரதமர் மோடி​யுடன் மெஸ்ஸி இன்று சந்​திப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடியை, அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் நட்​சத்​திர வீரர் லயோனல் மெஸ்ஸி இன்று சந்தித்துப் பேசவுள்​ளார்.

லயோனல் மெஸ்ஸி ‘கோட் இந்​தியா டூர் 2025’ என்ற பெயரில் இந்​தி​யா​வுக்கு 3 நாள் பயண​மாக வந்​துள்​ளார். முதல் நாளில் கொல்கத்​தா, ஹைத​ரா​பாத் நகரங்​களில் நடை​பெற்ற நிகழ்ச்சிகளில் மெஸ்ஸி பங்​கேற்​றார். ஹைத​ரா ​பாத்​தி​லுள்ள உப்பல் மைதானத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி​யுடன் மெஸ்ஸி நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றார்.

நேற்​றைய 2-ம் நாள் பயணத்​தில் மும்பை வான்கடே மைதானத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சிகளில் கால் ​பந்து நட்​சத்​திரம் மெஸ்ஸி பங்​கேற்​றார். மெஸ்​ஸியைக் காண ஆயிரக்​கணக்​கான ரசிகர்​கள் திரண்​டிருந்​தனர். இந்​நிலை​யில் இன்று 3-ம் நாள் நடை​பெறவுள்ள நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடியை, டெல்​லி​யில் மெஸ்ஸி சந்​தித்​துப் பேசவுள்​ளார்.

பிரதமர் மோடி​யின் டெல்லி இல்​லத்​தில் இந்த சந்​திப்பு நடைபெறவுள்​ளது. காலை 10.45 மணிக்கு டெல்லி வரும் மெஸ்​ஸி, நகரிலுள்ள ஒரு ஓட்​டலில் நடை​பெறும் ‘மீட் அன்ட் கிரீட்’ என்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கிறார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி இல்​லத்​துக்​குச் சென்று அவரை சந்​தித்து பேசுகிறார்.

பின்​னர் இந்​தி​யா​வுக்​கான அர்​ஜெண்​டினா நாட்​டின் தூதர் மரியானோ அகஸ்​டின் கவுசினோவைச் சந்​தித்​துப் பேசுகிறார். அதற்கு அடுத்​த​படி​யாக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், முப்​படைத் தலை​மைத் தளபதி உபேந்​திர திவேதி ஆகியோரை​யும் மெஸ்ஸி சந்​தித்து உரை​யாட​வுள்​ளார்.

பின்​னர் மாலை 3.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி கிரிக்​கெட் மைதானம் செல்​லும் மெஸ்​ஸிக்கு அங்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​படு​கிறது. அங்கு நடை​பெறும் காட்சி கால்​பந்​துப் போட்டி​யில் அவர் பங்​கேற்​கிறார். பின்​னர் அங்கு நடை​பெறவுள்ள கால்​ பந்து முகாமில் 22 வீரர்​களு​டன் அவர் கலந்​துரை​யாடு​கிறார்.

இதைத் தொடர்ந்து கிரிக்​கெட் மைதானத்​துக்கு வரும் மெஸ்ஸிக்கு, 2 இந்​திய கிரிக்​கெட் வீரர்​கள் பரிசளிக்க உள்​ளனர். பின்​னர் அவர்​களுக்கு அர்​ஜெண்டினா கால் ​பந்து அணி​யின் சீருடையை மெஸ்ஸி வழங்​கு​வார்​. இதைத் தொடர்ந்து அவர் இந்தியா​விலிருந்து புறப்​பட்​டுச் செல்​ல​வுள்​ளார்.

பிரதமர் மோடி​யுடன் மெஸ்ஸி இன்று சந்​திப்பு
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி | India vs South Africa 3rd T20I

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in