தேர்தல் வாக்குறுதிகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதிகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ​முடிந்து போன திமுக ஆட்சி மீது பழி சுமத்​து​வதை விட்​டு​ விட்​டு, தேர்​தல் வாக்​குறு​தி​களை தாமதப்​படுத்​தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்​டும் என தவெக அரசை நயி​னார் நாகேந்​திரன் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுகுறித்து, பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ், தமிழகத்​தின் அரசு அதி​காரி​கள் மற்​றும் விஐபி-க்​கள் அனை​வரும் அரசுப் பொது மருத்​து​வ​மனை​களில் நம்​பிக்கை வைத்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்​டும் என்​று, கேட்​டுக்​கொண்​டுள்​ளார்.

இது வரவேற்​கத்​தக்​கது. என்​றாலும், இது, வெறும் வாய்​மொழி​யாக​வும், வேண்​டு​கோளாக​வும் இல்​லாமல், தமிழக அரசின் உத்​தர​வாக இருக்​குமே​யா​னால், தமிழகத்​தின் மருத்​து​வத்​துறை பெரும் ஏற்​றத்​தை​யும், புது மாற்​றத்​தை​யும் பெறும் என்​பது மறுக்க முடி​யாத உண்​மை.

முக்​கி​யத் தலை​வர்​களான அண்​ணா, காம​ராஜ், கக்​கன், கருணாநி​தி, எம்​ஜிஆர் ஆகியோர் அரசு மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை எடுத்து நலம்​பெற்ற உதா​ரணங்​கள் உண்​டு. இன்​றைய அரசு பொது மருத்​து​வ​மனை​களின் நிலையோ பரி​தாபகர​மாக இருக்​கிறது. உருக்​குலைந்த கட்​டிடங்​கள், சீரழிந்த சுகா​தா​ரம், போதிய மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் இல்​லாமல் நோயாளி​கள் பரிதவிக்​கும் நிலை.

இவை​கள்​தான் இன்​றைய அரசு மருத்​து​வ​மனை​களின் அவல நிலை அடை​யாளங்​கள். கிராமப்​புற பகு​தி​களிலோ அடிப்​படை மருத்​துவ சுகா​தார வசதி​கள் போதிய அளவில் இல்​லை. மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் இல்​லாத​தால், நோயாளி​களுக்கு மருத்​து​வ​மனை​யின் தூய்மை பணி​யாளர்​கள் சிகிச்சை எடுக்​கும் நிலை உரு​வாகி​யுள்​ளன.

எனவே, நடந்து முடிந்​து​போன திமுக ஆட்​சி​யின் மீது, பழி சுமத்​திக்​கொண்​டிருக்​காமல் புதி​தாக ஆட்​சிக்கு வந்​துள்ள தவெக அரசு, கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அளித்த வாக்​குறு​தி​களை தாமதப்​படுத்​தாமல் நிறைவேற்ற வேண்​டும்.

2026 சட்​டப்​பேரவை தேர்​தலின்​போது தவெக அரசு வெளி​யிட்​டுள்ள தேர்​தல் அறிக்​கை​யின் 7-ம் பக்​கத்​தில் இன்​பம் என்​னும் பகு​தி​யில், தமிழகத்​தின் அனைத்து குடும்​பங்​களுக்​கும் உயர்​தர​மான மருத்​து​வம் வழங்​கப்​படும்.

தவெக அரசு அமைந்​தவுடன் ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ரூ.25 லட்​சம் மதிப்​பிலான ‘மக்​கள் நலன் காப்​பீடு’ அட்டை வழங்​கப்​படும். ஆண்​டுக்கு ஒரு​முறை கட்​ட​ணமில்லா முழு உடல்​பரிசோதனை செய்​யப்​படும்.

உயர்ரக மருத்​துவ மருந்​துகள் குறைந்த விலைக்கு விற்​கப்​படும். கிராமப்​புறங்​களில் அவசர சிகிச்​சைப் பிரிவு, மகப்​பேறு பரிசோதனை அறுவை சிகிச்சை அரங்​கம் மற்​றும் ஆம்​புலன்ஸ் வசதி ஆகியவை செய்​துதரப்​படும் என்​றும் கூறப்​பட்​டுள்​ளன.

ஆகவே, கடந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் தமிழக முதல்​வர் விஜய், மக்​களிடம் அளித்த மருத்​துவ வாக்​குறு​தி​களை உடனடி​யாக நிறைவேற்ற வேண்​டும்.

பொது மருத்​து​வ​மனை​களின் தரத்தை உயர்த்​தி, அவசர சிகிச்​சைப்​பிரி​வில் இருக்​கும் அரசு மருத்​து​வத்​துறையை காப்​பாற்றி தமிழக மக்​களுக்கு நன்​மை​கள் செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தேர்தல் வாக்குறுதிகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
பரந்தூரில் சிப்காட் அமைக்க முயன்றால் விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் நிற்போம்: வேல்முருகன் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in