“அமைச்சர் ராஜ்மோகனிடம் ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் யார்?” - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on: 
1 min read

சென்னை: “அமைச்சர் ராஜ்மோகனிடம் ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் யார், அவரை ஏன் கைது செய்யவில்லை, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணிக்கு இதில் என்ன தொடர்பு?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி வரை உங்களுக்கு லஞ்சம் தரத் தயாராக இருந்த நபரை அடையாளம் காட்டுவதிலோ அல்லது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்வதிலோ அரசுக்கு என்ன சிக்கல்?

லஞ்சம், ஊழல் குறித்த புகார்களை பதிவு செய்ய உங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண்ணுக்கு, நீங்களே ‘anonymous’ ஆக புகார் அளித்திருக்கலாமே? அதை விட்டுவிட்டு அரசு அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?

அதுமட்டுமன்றி, உங்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இருக்கும் லயோலா மணியை எதற்காக அணுகுகிறார்கள்? அவரைப் பிடித்தால் தான் உங்களை நெருங்க முடியும் என்ற சொல்லப்படாத விதி ஏதேனும் இருக்கிறதா? அல்லது அவர் மூலமாகத் தான் உங்கள் பணப் பரிவர்த்தனைகள் நடக்கிறதா?

‘ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காதீர்கள்’ என்று முதல்வரே பொது மேடையில் கூறிய பிறகும் கூட, கோடிக்கணக்கில் அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க ஒருவர் முயல்கிறார் என்றால், அமைச்சர்கள் மட்டத்தில் முறைகேடுகள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று தானே அர்த்தம்? ஒருவேளை பேரம் படியாததால் தான் இன்று பொதுவெளியில் வந்து இப்படி புலம்புகிறீர்களோ? பதில் சொல்லுங்கள் அமைச்சரே” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன் </p></div>
ஐரோப்பாவில் அதிர்ச்சி: மீண்டும் சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களை குறிவைத்து சைபர் தாக்குதல்

X