“விஜய் அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு பணவீக்கமே சான்று” - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on: 
1 min read

சென்னை: “தமிழகத்தின் பணவீக்கம் உச்சக்கட்ட நிலைக்கு எகிறியிருப்பது, முதல்வர் விஜய் அரசின் அப்பட்டமான நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்று” என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழகத்தின் பணவீக்கம் தேசிய சராசரியைத் தாண்டி 6.81 சதவீதம் என்ற உச்சக்கட்ட நிலைக்கு எகிறியிருப்பது, முதல்வர் விஜய் அரசின் அப்பட்டமான நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாகும்.

தொலைநோக்குப் பார்வையின்றி அத்தியாவசியப் பொருட்களின் உள்ளூர் சந்தை விலையைக்கூடக் கட்டுப்படுத்தத் தவறி, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் சீரழித்து சாமானிய மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார் விஜய்.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், கடந்த 3 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. புதிய தொழில் முதலீடுகள் எதுவும் வராமல் ஒட்டுமொத்த தொழிற்துறையும் முடங்கிக் கிடக்கிறது.

மறுபுறம், மின்துறையில் வரலாறு காணாத நிர்வாகச் சீர்கேடு தலைவிரித்தாடுகிறது; ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 வரை கொடுத்து வாங்கி அரசு கஜானாவைக் காலி செய்யும் இத்தகைய கையாலாகாத்தனம் முதல்வர் விஜய் ஆட்சியில் மட்டுமே அரங்கேறுகிறது.

இத்தகைய தொடர் நிர்வாகச் சீர்கேடுகளே இன்று தமிழகத்தில் பணவீக்கம் தேசிய சராசரியைத் தாண்டியதற்கு முக்கியக் காரணங்களாகும். இனியாவது வெற்று விளம்பரங்களை விடுத்து, நிர்வாகக் குளறுபடிகளைச் சரிசெய்ய முன்வர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன்</p></div>
அரசுப் பேருந்தில் திமுக குறித்த சர்ச்சை வாசகங்கள்: வைரல் வீடியோவுக்கு அதிகாரிகள் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in