தேர்தலில் மக்கள் பலம்தான் வெல்லும்; பணபலம் ஒருபோதும் வெல்லாது: நயினார் நாகேந்திரன் உறுதி

தேர்தலில் மக்கள் பலம்தான் வெல்லும்; பணபலம் ஒருபோதும் வெல்லாது: நயினார் நாகேந்திரன் உறுதி
Updated on
1 min read

மதுரை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மக்கள் பலம்​தான் வெல்​லும், ஒரு​போதும் பணம் பலம் வெல்​லாது என பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். மதுரை​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக அரசு 5 ஆண்​டுக்கு முன்பு 500-க்​கும் மேற்​பட்ட வாக்​குறு​தி​களை அளித்​தது.

அதில் ஒன்​றிரண்​டைத்​ த​விர வேறு எதை​யும் நிறைவேற்​ற​வில்​லை. இருப்​பினும் மக்​களை ஏமாற்​றும் வகை​யில், மக்​களின் மன நிலையை மாற்​றும் வகை​யிலும் சில அறி​விப்​பு​களை வெளியிட்டு தேர்​தலைச் சந்திக்க உள்​ளது.

தமிழகத்​தில் கருணாநி​தி, ஸ்டா​லின், உதயநிதி என அவர்​களின் குடும்​பம் மட்​டுமே ஆள வேண்​டும் என நினைக்​கின்​றனர். தற்​போது துணை முதல்​வ​ராக இருக்​கும் உதயநி​தியை முதல்​வ​ராக்​கு​வதற்​காக பல்​வேறு தவறான திட்​டங்​களை, தவறான செய்​தி​களை பரப்பி வரு​கின்​றனர். திமுக​வுக்கு மக்​களைப் பற்றி கவலை​ இல்​லை.

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தை நிறைவேற்​ற​வில்​லை. தற்​போது அதற்​குப் பதிலாக கொண்டு வரப்​பட்​டுள்ள திட்​டத்​தில் அரசு ஊழியர்​கள் 10 சதவீத பணம் செலுத்த வேண்​டும்.

தேர்​தலுக்​காக பொங்​கல் பணம், கோடை கால நிவாரண நிதி என அறி​வித்து மக்​களை திசை திருப்பி வரு​கின்​றனர். பண பலம் மற்​றும் அதி​கார பலத்தை வைத்து மீண்​டும் ஆளும் கட்​சியாக வந்​து​விடலாம் என நினைக்கின்​றனர். அது நடக்​காது.

தமிழகத்​தில் நடப்​பதை எல்​லாம் மக்கள் புரிந்து வைத்​துள்​ளனர். தமிழகத்​தில் எங்கு பார்த்​தா​லும் கஞ்​சா, போதை பொருள் நடமாட்​டம். திமுக ஆட்சி காலத்​தில் தமிழகத்​தில் 1977 கொலைகள் நடந்​துள்​ளன. 361 குழந்​தைகள் கொலை செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதில் 38 பேர் பெண் குழந்​தைகள். குழந்​தைகள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்டு கொலை செய்​யப்​பட்​டுள்​ளனர். இதற்​குக் காரணம் கஞ்சா மற்றும் போதை பொருள் நடமாட்​டம்.

விளாத்​தி​குளம் மாணவி கொலையில் இப்​போது வரை போலீ​ஸார் குற்​ற​வாளிகளைக் கண்​டு​பிடிக்க​வில்​லை. குழந்தை உட்பட 60 வயது பெண் வரை பாலியல் ​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​டுள்​ளனர்.

கஞ்​சா, போதைப் பொருட்​களின் நடமாட்​டத்​தைக் கட்​டுப்​படுத்​தா​விட்டால் மாணவர்​களின் எதிர்​காலம் என்​ன​வாகும். இவை எதை​யும் கவனத்​தில் கொள்​ளாமல் முதல்​வர் செயல்​படு​கிறார்.

நடிகர் ரஜினி​காந்த்தை தவெக நிர்​வாகி ஆதவ் அர்​ஜுன் விமர்​சனம் செய்​திருப்​பது வருந்​தத்​தக்​கது. இதை முதலில் பாஜக​தான் கண்​டித்​தது. ஆதவ் அர்​ஜுனா வருத்​தம் தெரி​விப்​பார் என்று எதிர்​பார்த்​தோம். அவர் வருத்​தம் தெரிவிக்​க​வில்​லை.

தேசிய ஜனநாயக் கூட்​ட​ணி​யில் தொகுதி பங்​கீடு குறித்து எந்​தச் சிக்​கலும் இல்​லை. அதற்கு இன்​னும் நாட்​கள் இருக்​கின்​றன. இந்​தத் தேர்​தலில் மக்​களாட்சி மீண்​டும் அமை​யும். ஒரு​போதும் பண பலம் ஜெயிக்​காது. மக்​களின் பலம்​தான் ஜெயிக்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

தேர்தலில் மக்கள் பலம்தான் வெல்லும்; பணபலம் ஒருபோதும் வெல்லாது: நயினார் நாகேந்திரன் உறுதி
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in