சென்னை மாநகராட்சியில் ஒரே மாதத்தில் 248 டெண்டர்கள் வெளியிட்டது எப்படி? - நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை மாநகராட்சியில் ஒரே மாதத்தில் 248 டெண்டர்கள் வெளியிட்டது எப்படி? - நயினார் நாகேந்திரன் கேள்வி
Updated on
1 min read

சென்னை: பிப்​ர​வரி மாதத்​தில் மட்​டும் 248 டெண்​டர்​களை சென்னை மாநகராட்சி​ வெளி​யிட்​டிருப்​பது எப்​படி சாத்​தி​யம்? என, பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்பி உள்​ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் தள பதி​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட் இன்​னும் தாக்​கல் செய்​யப்​ப​டாத நிலை​யில், முன்​கூட்​டியே மாநில நெடுஞ்​சாலைத் துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்​கி, திமுக அரசு அரசாணையை வெளி​யிட்​டுள்​ளது அதிர்ச்​சி​யளிக்​கிறது.

இதற்​கிடையே, சென்னை மாநகராட்சி நாளொன்​றுக்கு சராசரி​யாக 40 டெண்​டர்​களை வெளி​யிட்​டு, ரூ.4 ஆயிரம் கோடி மதிப்​பிலான பணி​களை விரைந்து முடிக்க அவசரக​தி​யில் செயல்​பட்​டுக் கொண்​டிருப்​பது பல சந்​தேகங்​களைக் கிளப்​பு​கிறது.

வழக்​க​மாக அரசு டெண்​டர்​களை வெளி​யிட பல மாதங்​களாகும் நிலை​யில், நெடுஞ்​சாலை துறைக்​கான டெண்​டருக்கு மூன்றே நாட்​களில் அரசாணை வெளி​யிடு​வதும், பிப்​ர​வரி மாதத்​தில் மட்​டுமே சென்னை பெருநகர மாநகராட்சி 248 டெண்​டர்​களை வெளி​யிட்​டிருப்​பதும் எப்​படி சாத்​தி​ய​மாகியது?

இவையெல்​லாம் தேர்​தலுக்கு முன் கமிஷன் கல்லா கட்ட திமுக அரசு செய்​யும் தந்​திர​மா? என்​பதை முதல்​வர் ஸ்டா​லின் விளக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

சென்னை மாநகராட்சியில் ஒரே மாதத்தில் 248 டெண்டர்கள் வெளியிட்டது எப்படி? - நயினார் நாகேந்திரன் கேள்வி
மார்ச் முதல் ஊதிய உயர்வு வழங்க அரசு உறுதி: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in