

சென்னை: ‘பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டின்போது 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்கப்படும் என்று கூறி சுமார் ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கிய திமுக அரசு, தற்போது வெறும் 10 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை.
பல லட்சம் மாணவர்கள் உள்ள தமிழகத்தில் வெறும் 10 லட்சம் மாணவர்கள் மட்டும் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தைத் தூசிதட்டி எடுத்தால் முதல் தலைமுறையினர் மயங்கி திமுகவுக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்களா? ஓராண்டு கால ஆட்சியை வைத்துக் கொண்டு 2 வருடங்களில் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி என்று பட்ஜெட் ஒதுக்கியது ஏன்? என்று அதில் கூறப்பட்டுள்ளது.