"முதல்வர் விஜய்க்கு சால்வை அணிவித்ததை கொச்சைப்படுத்த வேண்டாம்” - நயினார் நாகேந்திரன்

 முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் மரியாதை 

முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் மரியாதை 

Updated on: 
1 min read

சென்னை: “ஒரு கட்சி தலைவர் என்கிற முறையில் முதல்வர் விஜய்க்கு நான் சால்வை போட்டு மரியாதை செலுத்தினேன். அதை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.

அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் “மின்வெட்டு பிரச்சினை நிறைய இருக்கிறது. அந்த வேலையை பார்க்காமல், நான் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கேள்வி கேட்பதால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது?

நிறைய முன்னுதாரணங்கள் இருக்கிறது. அதை நான் சொல்ல விரும்பவில்லை. அப்படி சொன்னால், தொடர்ந்து நான் தவெகவை விமர்சிப்பதாக இருக்கும்.

தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருக்க வேண்டும். இதுதான் எங்களின் கோரிக்கையும். ஒரு கட்சி தலைவர் என்கிற முறையில் முதல்வர் விஜய்க்கு நான் சால்வை போட்டு மரியாதை செலுத்தினேன். அதை யாரும் கொச்சைப்படுத்தாதீர்கள். ஒரு நாட்டின் பிரதமர் வரும்போது, அவரை முதல்வர் வரவேற்பது மரபு” என்றார்.

<div class="paragraphs"><p> முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் மரியாதை&nbsp;</p></div>
“அதிகார பீடமான தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு பாதிப்பு” - அன்புமணி கவலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in