“அரசியலை விட்டு விலகத் தயார்” - செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் சவால்

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on
1 min read

திருநெல்வேலி: கல்​லூரி தொடங்​கு​வதற்​கான எனது விண்​ணப்​பத்தை அரசுவெளி​யிட்​டால், அரசியலை விட்டு வில​கத் தயார் என அமைச்​சர் செங்​கோட்டையனுக்​கு, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் சவால் விடுத்​துள்​ளார்.

திருநெல்​வேலி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அமைச்​சர் செங்​கோட்​டையனுக்கு கணக்கு சரி​யாக வராது. பாஜக வாக்கு வங்கி சரிந்​து​விட்​ட​தாகக் கூறுகிறார். கடந்த மக்​கள​வைத் தேர்​தலை​விட தற்​போது 0.8 சதவீதம் கூடு​தலாக வாக்​கு​கள் பெற்​றுள்​ளோம். இந்த கணக்கு கூட தெரி​யாதவர் வரு​வாய்த் துறை​யில் என்ன சாதிக்​கப் போகிறார்?

நான் கல்​லூரி தொடங்க விண்​ணப்​பித்​த​தாக கூறப்​படும் விண்​ணப்​பம், செங்​கோட்​டையனிடம் இருந்​தால் அதை வெளி​யிடட்​டும். அது உண்​மை​யாக இருந்​தால் நான் அரசி​யலை விட்டு வில​கத் தயா​ராக இருக்​கிறேன். இல்​லை​யெனில் அவர் அமைச்​சர் பதவியை விட்டு வில​கத் தயா​ரா? தமிழகத்​தில் ஸ்டூடியோ ஆட்​சியை தமிழக வெற்​றிக் கழகம் நடத்தி வரு​கிறது. சட்​டப்​பேர​வை​யில் ஆதா​ரமற்ற கருத்​துகளை முதல்​வர் பேசுவதை, பேர​வைத் தலை​வர் அனு​ம​திக்ககூடாது. டெல்லி சிறப்பு பிர​தி​நி​தி​யாக ஜனநாயகன் படத்தயாரிப்​பாளர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இவர் கர்​நாட​காவைச் சேர்ந்​தவர். கர்​நாடக முதல்வர்டி.கே.சிவக்​கு​மாரின் நண்பர்.

தமிழக அரசின் திட்​டங்​களை​யும், தேவை​யான நிதி​யை​யும் பெற்​றுத் தர வேண்​டிய இடத்​தில் உள்ள டெல்லி சிறப்பு பிர​தி​நி​தி​யாக, அண்டை மாநிலத்தைச்சேர்ந்த ஒரு​வரை நியமிப்​பது சரி​யான அணுகு​முறையா என்ற கேள்வி எழுகிறது. ஐஏஎஸ் அதி​காரி​களின் பதவிக்​கான மரி​யாதையைக் கூட இந்த அரசின் அமைச்​சர்​கள் கொடுப்​ப​தில்​லை. இவ்​வாறு கூறினார்.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன்</p></div>
“நேற்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம், ஆனால் இன்று…” - பாக்யராஜ் மறைவு குறித்து சிரஞ்சீவி வேதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in