என்டிஏ ஆட்சிக்கு வந்தால் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படும்: நயினார் நாகேந்திரன் உறுதி

என்டிஏ ஆட்சிக்கு வந்தால் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படும்: நயினார் நாகேந்திரன் உறுதி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைந்​த​பிறகு மாநிலம் முழு​வதும் நவோதயா பள்ளிகள் தொடங்​கப்​படும் என பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கல்​வி​யில் சிறந்து விளங்​கும் கிராமப்​புற மாணவர்​களுக்கு இலவச உண்டு உறை​விட வசதி​யுடன் தரமான கல்​வியை நல்​கும் ஜவஹர் நவோதயா பள்​ளி​களைத் தனது அற்ப அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யின் காரண​மாக தமிழகத்​தில் வரவி​டா​மல் தடுக்​கும் திமுக அரசைத் தனது கேள்வி​களால் துளைத்​தெடுத்​துள்​ளது உச்ச நீதி​மன்​றம்.

மொழியைக் காரணம் காட்டி, தமிழக கிராமப்​புற மாணவர்​களை முன்​னேற​வி​டா​மல் தடுப்​பது முறை​யானதல்ல எனச் சரி​யாக சுட்​டிக்​காட்​டி​யுள்​ளது.

பள்​ளி​கள் பெரு​கும்​போது தான் முன்​னேறும் வாய்ப்​பு​களும் பெரு​கும் எனச் சுட்​டிக்​காட்டி திமுக அரசின் தலை​யில் நறுக்​கென்று உச்ச நீதிமன்றம் குட்டு வைத்​துள்​ளது மகிழ்ச்​சி​.

இத்​தனை ஆண்​டு​கள் ஏழை எளிய கிராமப்​புற மாணவர்​களின் எதிர்​காலத்​தைச் சிதைத்த பாவத்​துக்கு பிராயசித்​த​மாக உச்ச நீதி​மன்​றத்​தின் ஆணைக்​கிணங்க மாவட்​டம் தோறும் நவோதயா பள்ளிகள் அமைப்​ப​தற்​கான நிலத்தை திமுக அரசு கண்​டறிய வேண்​டும்.

நீதி​மன்ற உத்​தர​வை​யும் வழக்​கம்​போல் திமுக அவம​தித்​தா​லும் பிரச்​சினையில்​லை. அடுத்து அமைய​விருக்​கும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்​சி​யால் தமிழகம் முழு​வதும் நவோதயா பள்​ளி​களைத் தொடங்​கி, கல்​வித் தரம் உயர்த்தப்​படும்​.

என்டிஏ ஆட்சிக்கு வந்தால் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படும்: நயினார் நாகேந்திரன் உறுதி
பழனிசாமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கு முகாந்திரமில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in