பழனிசாமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கு முகாந்திரமில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்

பழனிசாமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கு முகாந்திரமில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் 11 மருத்​து​வக் கல்​லூரி​கள் கட்​டப்​பட்​ட​தில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக முன்​னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ரான ஊழல் குற்​றச்​சாட்​டுக்கு முகாந்​திரமில்லை என அரசு தலைமை வழக்​கறிஞர் உயர் நீதி​மன்​றத்​தில் தகவல் தெரி​வித்​துள்​ளார்.

கடந்த அதி​முக ஆட்சிக் காலத்​தில் ராம​நாத​புரம், நாகப்​பட்​டினம், விருதுநகர், திண்​டுக்​கல், கள்​ளக்​குறிச்​சி, நாமக்​கல், கிருஷ்ணகிரி, நீல​கிரி, திரு​வள்​ளூர், திருப்​பூர், அரியலூர் ஆகிய 11 மாவட்​டங்​களில் மருத்​து​வக் கல்​லூரி​கள் கட்​டப்​பட்​ட​ன. இதில் முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாகக் கூறி திரு​வாரூர் மாவட்​டம் நன்​னிலத்​தைச் சேர்ந்த ராஜசேகர் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், இந்த மருத்​து​வக் கல்​லூரி​கள் தேசிய மருத்​துவ ஆணைய விதி​முறை​களுக்​குட்​பட்டு கட்​டப்​பட​வில்​லை. இந்த கட்​டு​மானங்​களில் ஊழல் நடந்​துள்​ள​தால் பொதுப்​பணித்​துறை​யின் அமைச்​ச​ராக பதவி வகித்த முன்​னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ராக வழக்​குப்​

ப​திவு செய்து விசா​ரிக்க சிபிஐ அல்​லது மத்​திய புலன் விசா​ரணை அமைப்​பு​களுக்கு உத்​தர​விட வேண்​டும் என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்​ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் ஆஜராகி, ‘மனு​தா​ரர் அளித்த புகாரின்​பேரில் லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் நடத்​திய முதற்​கட்ட விசா​ரணை​யில் மருத்​து​வக் கல்​லூரி​கள் கட்​டப்​பட்​ட​தில், முன்​னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ரான ஊழல் குற்​றச்​சாட்​டுக்கு எந்த முகாந்​திர​மும் இல்லை என்​பது தெரிய​வந்​துள்​ளது.

இதுதொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை அதி​காரி​கள் துறை​யின் ஆணை​யருக்கு விரி​வான அறிக்கை அனுப்​பி​யுள்​ளனர். அதனடிப்​படை​யில் மனு​தா​ரர் அளித்த புகார் முடித்து வைக்​கப்​பட்​டு, பழனிசாமிக்கு எதி​ரான அனைத்து நடவடிக்​கைகளை​யும் தமிழக அரசு கைவிட்​டு​விட்​டது என்​றார்.

அரசு தரப்​பின் முடிவுக்கு மனு​தா​ரர் தரப்​பில் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து, புகார் முடித்து வைக்​கப்​பட்​ட​தாக அரசு தரப்​பில் கூறு​வதை நீதித்​துறை​யின் ஆய்​வுக்கு உட்​படுத்த முடி​யுமா என்​பது குறித்து மனு​தா​ரர் விளக்​கமளிக்க உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை 4 வார காலத்​துக்​கு நீதிபதிகள் தள்​ளிவைத்​தனர்​.

பழனிசாமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கு முகாந்திரமில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்
திருப்பரங்குன்றம் தீபத் தூண் யாருக்கு சொந்தம்? - உயர் நீதிமன்றத்தில் வக்பு வாரியம் தரப்பில் வாதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in