சட்டப்பேரவை நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன: நயினார் நாகேந்திரன் கருத்து

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on
1 min read

திருநெல்வேலி: தமிழக சட்​டப்​பேர​வை​யில் நடக்​கும் நிகழ்​வு​கள் வேதனை அளிப்பதாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

திருநெல்​வேலி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: நேபாளத்​தில் ஏற்​பட்ட பெரு வெள்​ளம் யாரும் எதிர்​பா​ராத நிகழ்​வாக நடந்​து​விட்​டது.சுனாமியைவிட மிகப்​பெரிய கோரத் தாண்​ட​வம் இந்த வெள்​ளத்​தில் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தி​யாவைச் சேர்ந்​தவர்​கள் பலர் நேபாளம் சென்ற நிலை​யில், அவர்​களை தொடர்​பு​கொள்ள முடி​யாத நிலை இன்​ன​மும் நீடித்து வரு​கிறது. இதில் தமிழர்​கள் பலரும் சிக்​கித் தவித்து வரு​கின்​றனர்.

மூன்று பேருந்​துகளில் சுற்​றுலா சென்ற இந்​தி​யர்​கள் கண் முன்னே இரண்டு பேருந்​துகள் தண்​ணீரில் அடித்​துச் செல்​லப்​பட்​டுள்​ளன. அதில் 21 பேர் மட்​டுமே மீட்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களை இந்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் மூலம் நேரடி​யாகச் சென்று பார்த்து வரவேற்​றோம். அவர்​களது உடைமை​கள் அனைத்​தும் வெள்​ளத்​தில் அடித்து செல்​லப்​பட்​டு​விட்​டன. பலரது பாஸ்​போர்ட் இல்​லாமல் போய்​விட்​டது. அவர்​களுக்கு வீடு​களுக்கே சென்று பாஸ்​போர்ட் வழங்க நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

நேபாளத்​தில் வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி தேவை​யான உதவி​களை செய்து வரு​கிறார். அந்த நாட்டு அரசுடன் இணைந்து தேடு​தல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்​படுத்தி இருக்​கிறார். மூன்று விமானங்​களில் பொருட்​கள் அனுப்​பப்​பட்​டுள்​ளன.

பிரதம​ராக ராகுல் காந்தி வர முடி​யாது. அந்​தக் கனவு பலிக்​காது என அனை​வருக்​கும் தெரி​யும். ராகுல் காந்தி பிரதம​ராக வரு​வதற்கு எந்த தகு​தி​யும் கிடை​யாது. அவருக்கு இத்​தாலி நாட்​டின் மீது​தான் அக்​கறை அதி​கம். இந்​திய நாட்​டின் மீது அவர்​களுக்கு எப்​போதுமே அக்​கறை இருந்​தது கிடை​யாது. அதனால் தான் சோனியா காந்தி வந்தே மாதரம் பாடல் பாடும்​போது தடுத்து நிறுத்​தி​னார்.

அண்​ணா, எம்​ஜிஆர், ஜெயலலிதா என இருந்த சட்​டப்​பேர​வை​யில் இப்​போது யார் யாரெல்​லாமோ இருக்​கிறார்​கள். சட்​டப்​பேர​வை​யில் தமிழகத்​தின் கோரிக்​கைகள் குறித்து பேசவேண்​டும். அதற்​காகத்​தான் சட்​டப்​பேரவை கூடு​கிறது.

ஆனால், எதைப் பேச வேண்​டுமோ அதை பேச மறுக்​கிறார்​கள். சாதி, மதம் குறித்து தேவையற்ற விவாதங்​கள் நடக்​கின்​றன. தமிழக சட்​டப்​பேர​வை​யில் நடக்​கும் நிகழ்​வு​கள் மிக​வும் வேதனை அளிக்​கிறது. வாக்​களித்த மக்​கள் சட்​டப்​பேரவை நிகழ்​வு​களை பார்த்து புரிந்​து​கொள்​வார்​கள் என நம்​புகிறேன். இவ்வாறு கூறினார்.

<div class="paragraphs"><p> நயினார் நாகேந்திரன்</p></div>
ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் சக்தியாவதை தடுப்பதற்காக விசிக விமர்சிக்கப்படுகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in