கொலை வழக்கில் கைதான 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நாகை அமர்வு நீதிமன்ற தீர்ப்பு ரத்து

ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு
கொலை வழக்கில் கைதான 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நாகை அமர்வு நீதிமன்ற தீர்ப்பு ரத்து
Updated on
1 min read

சென்னை: ​கொலை வழக்கில் கைதான 17 வயது சிறு​வனுக்கு ஆயுள் தண்​டனை விதித்து அமர்வு நீதி​மன்​றம் பிறப்​பித்த தீர்ப்பை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், வழக்கை இளஞ்​சிறார் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றி​யும் ரூ.1 லட்​சம் இழப்​பீடு வழங்க​வும் அரசுக்கு உத்​தர​விட்​டுள்​ளனர்.

மயி​லாடு​துறை​யில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த வன்​னியர் சங்க நிர்​வாகி கண்​ணன் கொலை வழக்​கில் 17 வயது சிறு​வனும் கைது செய்​யப்​பட்​டார். இந்தச் சிறுவனுக்கு எதி​ரான வழக்கை இளஞ்​சிறார் நீதி​மன்​றத்​துக்கு அனுப்​பாமல் மற்ற குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​களு​டன் சேர்த்து விசா​ரித்த நாகப்​பட்​டினம் அமர்வு நீதி​மன்​றம், சிறு​வனுக்​கும் ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது.

மேலும் அந்த சிறு​வனை நாகப்​பட்​டினம் இளஞ்​சிறார் சீர்​திருத்​தப்​பள்​ளி​யில் அடைக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்ட நிலை​யில், சிறு​வர் சீர்​திருத்​தப்​பள்ளி இல்லை எனக்​கூறி அந்த சிறு​வனை கடலூர் மத்​திய சிறை​யில் அடைத்​தனர். இந்​நிலையில் 17 வயது சிறு​வனுக்கு எதி​ரான இந்த வழக்கை நாகப்​பட்​டினம் அமர்வு நீதிமன்​றம் விசா​ரித்​தது தவறு என்​றும், கடலூர் மத்​திய சிறை​யில் அடைத்​தது அதை​விட தவறு என்​றும் கூறி சிறுவனின் தாயார் சவீதா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் அனிதா சுமந்த், சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்வு பிறப்​பித்த உத்​தர​வு: கொலைக்​குற்​றத்​தில் கைதான 18 வயது பூர்த்​தி​யடை​யாத சிறு​வன் மீதான வழக்கை மற்ற நபர்​களு​டன் சேர்த்து அமர்வு நீதி​மன்​றம் விசா​ரித்​தது சட்​டப்​படி தவறு. மேலும் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்ட நிலை​யில் சிறு​வர் சீர்​திருத்​தப்​பள்​ளி​யில் சேர்க்​காமல், கடலூர் சிறை​யில் அடைத்தது சட்​ட​விரோதம்.

எனவே அந்​தச் சிறு​வனை குற்​ற​வாளி என அறி​வித்து ஆயுள் தண்​டனை விதித்து அமர்வு நீதி​மன்​றம் பிறப்​பித்த தீர்ப்பு ரத்து செய்​யப்​படு​கிறது. இந்த வழக்கை மயி​லாடு​துறை சிறார் நீதி​மன்​றம் 6 மாதத்தில் விசா​ரித்து தீர்ப்​பளிக்க வேண்​டும். மேலும் அந்த சிறு​வனை சிறார் சீர்​திருத்​தப் பள்​ளி​யில் சேர்க்​காமல், கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் முதல் கடலூர் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்​த​தால் அவருக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்​கப்​படு​கிறது. கடலூர் மத்​திய சிறை​யில் சட்​ட​ விரோதமாக அடைக்​கப்​பட்​டிருந்த அந்த சிறு​வனுக்கு ரூ.1 லட்​சத்தை தமிழக அரசு இழப்​பீ​டாக வழங்க வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்​.

கொலை வழக்கில் கைதான 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நாகை அமர்வு நீதிமன்ற தீர்ப்பு ரத்து
“என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in