எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு

1.6 கிலோ வெள்ளி வாள் காணிக்கை
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் தமிழக முதல்வர் விஜய் நேற்று சிறப்பு வழிபாடு செய்தார்.  (உள்படம்: விஜய் வழங்கிய வெள்ளி வாள்)

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் தமிழக முதல்வர் விஜய் நேற்று சிறப்பு வழிபாடு செய்தார். (உள்படம்: விஜய் வழங்கிய வெள்ளி வாள்)

Updated on
3 min read

பெங்களூரு: கர்​நாட​கா​வில் உள்ள கொல்​லூர் ஸ்ரீமூகாம்​பிகை கோயி​லில் தமிழக முதல்​வர் விஜய் நேற்று சிறப்பு வழி​பாடு செய்​தார். அம்​மனுக்கு 1.6 கிலோ எடை​யுள்ள வெள்ளி வாளை காணிக்​கை​யாக வழங்​கி​னார்.

கர்​நாடக மாநிலம் உடுப்பி மாவட்​டம் பைந்​தூர் அருகே அமைந்​துள்ள கொல்​லூர் ஸ்ரீ மூகாம்​பிகை அம்​மன் கோயில் மிக​வும் பிரசித்தி பெற்​றது. இக்​கோயி​லின் மூல​வ​ரான ஸ்ரீ மூகாம்​பிகை அம்​மன் சரஸ்​வ​தி, லட்​சுமி, பார்​வதி ஆகிய மூன்று தெய்​வங்​களின் அம்​ச​மாக கருதப்​படு​கிறார். தமிழக முன்​னாள் முதல்​வர்​கள் எம்​ஜிஆர், வி.என். ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் இந்த கோயிலுக்கு வந்​து, சிறப்பு வழி​பாடு மேற்​கொண்​டுள்​ளனர்.

அதே​போல நடிகர் ரஜினி​காந்த், இசை ஞானி இளை​ய​ராஜா, கே.ஜே.யேசு​தாஸ் உள்​ளிட்ட திரை பிரபலங்​களும் இந்த கோயிலுக்கு அடிக்​கடி வந்து சென்​றுள்​ளனர். கடந்த ஆண்டு இளை​ய​ராஜா மூகாம்​பிகை கோயிலுக்கு ரூ. 4.5 கோடி மதிப்​பில் வைர கிரீடம், நெக்​லஸ், தங்க வாள், வெள்ளி கிரீடம் உள்​ளிட்​ட​வற்றை காணிக்​கை​யாக வழங்​கி​னார்.

இந்​நிலை​யில், டெல்​லிக்கு சென்​றிருந்த தமிழக முதல்​வர் விஜய் நேற்று காலை 12.30 மணிக்கு அங்​கிருந்து விமானம் மூலம் கர்​நாட​கா​வில் உள்ள மங்​களூரு​வுக்கு வந்​தார். கர்​நாடக சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் யு.டி.​காதரும், உடுப்பி மாவட்ட அரசு அதி​காரி​களும் அவருக்கு பூங்​கொத்து கொடுத்து வரவேற்​றனர். பின்​னர் மங்​களூரு​வில் இருந்து சுமார் 140 கி.மீ. தொலை​வில் உள்ள கொல்​லூர் ஸ்ரீமூகாம்​பிகை அம்​மன் கோயிலுக்கு காரில் சென்​றார். வழிநெடுக ஆங்​காங்கே விஜய்க்கு தமிழ், கன்னட‌ ரசிகர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

மாலை 3.30 மணி அளவில் கொல்​லூர் ஸ்ரீமூகாம்​பிகை அம்​மன் கோயிலுக்​குள் நுழைந்த விஜய்யை கோயில் நிர்​வாகி​கள் வரவேற்​று, சால்வை அணி​வித்​தனர். கோயி​லின் தலைமை அர்ச்​சகர் ராமச்​சந்​திர அடி​கா, முதல்​வர் விஜய்க்​காக 20 நிமிடங்​கள் சிறப்பு பூஜை செய்​தார். பின்​னர் கொடி மரம், நந்தி உள்​ளிட்​ட​வற்றை விஜய் தரிசனம் செய்​தார். கொல்​லூர் ஸ்ரீமூகாம்​பிகை அம்​மன் கோயிலுக்கு நேர்த்தி கடனாக 1.6 கிலோ எடை கொண்ட வெள்ளி வாளை காணிக்​கை​யாக வழங்​கி​னார். கொட்​டும் மழை​யிலும் கோயி​லில் காத்​திருந்த ரசிகர்​களை நோக்கி விஜய் உற்​சாக​மாக கையசைத்​தார். கோயிலுக்​குள் இருந்து வெளியே சாலைக்கு செல்​லும் வரை அவரே காரை ஓட்டி சென்​றார்.

வழக்​க​மாக பொது​மக்​கள் மற்​றும் பக்​தர்​களுக்கு இடையூறு ஏற்​ப​டாத வண்​ணம் பிற்​பகல் 1.30 முதல் 3.30 மணி வரை கோயில் நடை சாத்​தப்​படும். முதல்​வர் விஜய் வரு​கை​யையொட்டி நேற்று பிற்​பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை அந்த நேரம் மாற்றி அமைக்​கப்​பட்​டிருந்​தது. விஜ​யின் வரு​கையையொட்டி மங்​களூரு விமான நிலை​யம், கொல்​லூர் ஸ்ரீமூகாம்​பிகை கோயில் உட்பட வழிநெடுக‌ பலத்த போலீஸ் பாது​காப்​பும், தடை​யில்லா போக்​கு​வரத்து வசதி​யும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிந்​தது.

மேகே​தாட்​டு​வில் அணை கட்​டு​வதற்கு தமிழக அரசு எதிர்ப்​பதை கண்​டித்து கன்னட அமைப்​பினர் 10-க்​கும் மேற்​பட்டோர் கறுப்பு கொடி காட்ட முயன்​றனர். மங்​களூரு போலீஸார் அவர்​களை கைது செய்​து, மாலை​யில் விடு​வித்​தனர்.

எம்​ஜிஆர் வழங்​கிய தங்க வாள்

தமிழக முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆர் ஸ்ரீமூகாம்​பிகை அம்​மனின் தீவிர பக்​த​ராக இருந்​தார். அவர் முதல்​வ​ராக இருந்​த​போது, ஸ்ரீமூகாம்​பிகை அம்​மனுக்கு ஒரு கிலோ எடை​யுள்ள தங்க வாளைக் காணிக்​கை​யாக வழங்​கி​னார். அந்த வாள் திரு​விழா காலங்​களில் இப்​போதும் பயன்​படுத்​தப்​படு​கிறது. எம்​ஜிஆருக்கு பிறகு முதல்​வ​ரான அவரது மனைவி ஜானகி​யும் இந்த கோயிலுக்கு வந்து தங்​கம், வெள்ளி பொருட்​களை காணிக்​கை​யாக வழங்​கி​னார். 2004-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஸ்ரீமூகாம்​பிகை அம்​மனை தரிசித்​து, வெள்ளி வாளை காணிக்​கை​யாக வழங்​கி​னார். அப்​போது அவர் சண்​டி ஹோமம் நடத்​தி​யதுடன், எம்​ஜிஆர் வழங்​கிய தங்க வாளைத் தனது கைகளில் ஏந்தி வழி​பாடு செய்​தார்​. அந்த வரிசை​யில்​ தற்​போதைய முதல்​வர்​ விஜய்​ வெள்​ளி வாளை காணிக்​கை​யாக வழங்​கியது குறிப்​பிடத்​தகக்​து.

<div class="paragraphs"><p>கொல்லுார் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் கடந்த 2004-ல் ஜெயலலிதாவுக்கு பூர்ண கும்ப மரியாதை.</p></div>

கொல்லுார் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் கடந்த 2004-ல் ஜெயலலிதாவுக்கு பூர்ண கும்ப மரியாதை.

உடுப்​பி​யிலுள்ள கொல்​லூர் ஸ்ரீமூகாம்​பிகை அம்மன் கோயில் கோடாச்​சத்ரி மலைக் குன்​றுகளின் அடி​வாரத்​தி​லும், சவுபர்​ணிகா நதி​யின் தென்​புறத்​தி​லும் எழிலுற அமைந்​துள்​ளது. மேலும், இந்த இடமானது கோகர்​ணம் மற்​றும் கன்​னி​யாகுமரிக்கு இடையே அமைந்​துள்​ளது. மூகாம்​பிகை கோயில் அமைந்​துள்ள நிலப்​பகுதி புராண காலத்தில் பரசு​ராம​ரால் உரு​வாக்​கப்​பட்​டது என்று நம்​பப்​படு​கிறது. இக்​கோ​யில் மூல​வ​ராக விளங்​கும் ஸ்ரீமூகாம்​பிகை சிலையை 1,200 ஆண்​டு​களுக்கு முன்​னர் ஹலுகல்லு வீர சங்​கய்யா என்ற அரசன் நிறு​விய​தாக வரலாறு உள்​ளது.

இந்​தக் கோயில் 51 சக்தி பீடங்​களில் ஒன்​றாக​வும், தேவி​யின் காதுகள் விழுந்த பீட​மாகவும் போற்​றப்​படு​கிறது. தமிழ் மாதங்​களான புரட்​டாசி​யில் நவராத்​திரி விழா​வும், பங்​குனி மாதத்​தில் தேரோட்​ட​மும் இங்கு கொண்​டாடப்​படும் முக்​கிய திரு​விழாக்​களாக உள்​ளன. சங்கர மடத்தை நிறு​விய ஆதி சங்கரர் ஸ்ரீமூகாம்​பிகை தேவியின் தரிசனத்​தைக் கண்டு மகிழ்ந்த​தால் இங்கு ஸ்ரீமூ​காம்​பிகை கோயிலை நிர்​மாணித்​தார்​ என்​று நம்​பப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் தமிழக முதல்வர் விஜய் நேற்று சிறப்பு வழிபாடு செய்தார்.  (உள்படம்: விஜய் வழங்கிய வெள்ளி வாள்)	</p></div>
“மேட்டூர் அணை நிலவரம் நேற்றுதான் தெரியுமா?” - முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் சாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in