

திருச்சி: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை கூட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் இந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கரில் நடைபெற வேண்டிய குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சினையாகக் கருத வேண்டும்.
கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதைபோல, தமிழகத்திலும் ஒருமனதான முடிவெடுக்க முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தைக் கூட்ட வேண்டும். பாஜக, காங்கிரஸ் இருகட்சிகளும் தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.